உலகாய்தத்தை உணர்த்த உம்பர் உலகு சென்றாரோ பேரா.க.நெடுஞ்செழியன்!
பேரா.க.நெடுஞ்செழியன் மறைவு! தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று வைகறை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79. தமிழறிஞர், பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தமிழ் மெய்யியல், தமிழ் இலக்கியம், தமிழர் அரசியல், தமிழர் சமயம் ஆகிய துறையினரால் போற்றப்பட்டவர். ஆசீவகம் பற்றிய இவருடைய ஆய்வு தமிழாய்வு உலகில் மிகவும் முதன்மையானது. திருச்சி மாவாட்டம், இலால்குடி வட்டத்தில் உள்ள படுகை ஊரில் 15.06. 1944-இல் பிறந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று திருச்சியில் உள்ள ஈ.வே.இரா பெரியார்…
உலகத் தமிழ் நாள் & பேரா.சி.இலக்குவனார் பெருமங்கலம்
ஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது?
உலகத்தமிழர் பேரவையின் அந்தமான் தமிழர்கள் – பகிர்வாடல்
சென்னையில் சீனப் பெண் நிறைமதி பங்கெடுக்கும் நிகழ்ச்சி
உலகத் தமிழர் பேரவை சந்திக்கும் தமிழர் உலகம் இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002. மாசி 08, 2050 வெள்ளிக்கிழமை 22.02.2019 மாலை 04.30 மணி சிறப்புரை : தமிழும் – சீன மக்களும் உங்கள் செல்வி நிறைமதி (கிகி சாங்கு) (கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்) நிகழ்ச்சி நடுவர்: திரு. அக்கினி (உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்) செல்வி நிறைமதி (கிகி சாங்கு) காணொளி பார்க்க: https://www.youtube.com/watch?v=UH1sHrECtLs&t உலகத் தமிழர் பேரவை,…
உலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா
உலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா உலகத் தமிழர் பேரவையின் சென்னை தலைமையக அலுவலக வாயிலில் மார்கழி 28, 2049 / 12-01-2019 அன்று பறை இசை ஒலிக்க பொங்கல் விழா தமிழ் தேசிய மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடைபெற்றது. தமிழரின் பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என அனைவரும் முழக்கமிட்டனர். உலகத் தமிழர் பேரவையின் சென்னை அலுவலகம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா சாலையில் நெருக்கடியான போக்குவரத்துக்கு மத்தியில் பொங்கல் விழா அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. பறை இசைக்…
தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ – உரையரங்கம்
சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக் கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி, தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை முதலான பல அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி மழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார். த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார். இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார். முனைவர் க.ப. அறவாணன்…
உலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம்
உலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம் உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது! http://worldtamilforum.com/forum/forum_news/maaveerar_naal_27112016/ உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோரை நினைக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் (கார்த்திகை 12, 2047/27.11016 காலை 11 மணியளவில்,) சென்னையில் அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் அலுவலகத்தில் தமிழறிஞர் அரு. கோபாலன் தலைமையில் உறுதி மொழியும், உரையும் நிகழ்த்தப்பட்டன. ஈகை…
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி! இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 / 18-11-2016 வெள்ளி அன்று வெகு சிறப்பாகநடத்தியது. கோவை : கோவை மத்திய சிறைச்சாலை…
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017 வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017 பங்களிப்பும் படைப்பும் வேண்டல் ஆங்கிலத்திலுள்ள முழுவிவரத்திற்கும் பதிவுப்படிவத்திற்கும் காண்க : http://thiru2050.blogspot.in/2016/11/2017_18.html ஆசியவியல் நிறுவனம், சென்னை உலகத்தமிழர் பேரவை, மொரிசியசு
‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு!
‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு! (புரட்டாசி 15, 2047 / 01-10-2016 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை நடத்திய ‘தமிழ் உலகச் சந்திப்பு’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஈழம் முதலான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்த் தேசத்தவர்களும், தமிழகம், ஆந்திரா, மகாராட்டிரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசத்துப் பற்றாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்; சிறப்பித்தனர். உலகத் தமிழர்…
சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!
சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை! உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம் புரட்டாசி 15, 2047 / 01-10-2016 சனிக்கிழமை , மாலை 5 மணி உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது. தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை மேம்படுத்திப் பாதுகாப்பது. அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள். உலகளவில் நிகழக் கூடிய மனித நேயச் செயல்பாடுகளில் இணைந்து கொள்வது. சிறப்பு அழைப்பாளர்கள்: மேலை நாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தவர்கள்:…
