குறள் கடலில் சில துளிகள் 11. உலகம்தழுவியதேஅறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 11. உலகம் தழுவியதே அறிவு! உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 425) உலகத்தைத் தழுவிச் செல்லுதல் அறிவு. இன்பத்திற்கு மகிழ்தலும் துன்பத்திற்கு வருந்தலும் அறிவாகா என்கிறார் திருவள்ளுவர். துன்பத்திலிருந்து அறிவு வரும். ஆனால், அறிவு துன்பமோ இன்பமோ தராது என்கின்றனர் கல்வியியலறிஞர்கள். தழீஇயது என்பது உலகத்தாரைத் தழுவிச் செல்லுதல் –…