வெருளி நோய்கள் 446 – 450 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 441-445 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 446 – 450 உலர் சளி தொடர்பான வரம்பு கடந்த பேரச்சம் உலர்சளி வெருளி.சளியில் உள்ள தொற்றுயி நுண்மிகள் மூலம் பன்றிக்காய்ச்சல் முதலான நோய்கள் பரவுவதால், சளிமீதான பேரச்சம் வருகிறது. இருமலைத் தூண்டும்; சோர்வை உண்டாக்கும்; பொதுவான நலிவை ஏற்படுத்தும்; பல நாட்களுக்கு உடலைப் பாதிக்கக்கூடும்; என்ற காரணங்களால் உலர்சளி மீது பேரச்சங்கள் வருகின்றன.Nakusophobia என்பதையும் உலர்சளி வெருளி என முன்பதிப்பில் குறித்திருந்தேன். எனினும் இதை ஆசனவாய் வெருளி என்பதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே…
