தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : வி.உருத்திரகுமாரன் !

விடுதலைப்புலிகளின் தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : தலைமையர் வி.உருத்திரகுமாரன் ! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் (United Nations) ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை.  ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பெருவிருப்பாக அமைகின்ற தமிழீழத்தைக் கொள்கையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அக்கொள்கைக்காக எங்கும் தடை செய்யப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் அனைத்துலகப் பரப்பில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது…

தமிழ்ப்போராளி இலக்குவனார், கி.வீரமணி

தமிழ்ப்போராளி இலக்குவனார் கி.வீரமணி, தலைவர்,  திராவிடர் கழகம் நன்றி: தினத்தந்தி: 02.09.2018   தமிழ்ப் போராளி இலக்குவனார் நாளை (செப்டம்பர் 3-ந்தேதி) இலக்குவனார் நினைவு நாள். பதிவு: செட்டம்பர் 02,  2018 10:20 மு.ப. பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். தான் படித்த படிப்பு, சம்பாத்தியம் குடும்ப வளமைக்கு மட்டுமே என்னும் கண்ணோட்டம் அவருக்கு இருந்திருந்தால் அவர் வாழ்க்கை என்பது இவ்வளவுத் தொடர் தொல்லைகளுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி இருக்காது. இலக்குவனார், தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் சிற்றூரில் சிங்காரவேலர்-இரத்தினம் அம்மையார் ஆகியோரை…

கலைஞர் ஆயிரம் – கவிதாஞ்சலி

ஆயிரம் கவிஞர்கள் பங்கேற்கும் கலைஞருக்கான கவிதாஞ்சலி ஆவணி 22,2049 – 07.09.2018  காலை 9.00 முதல் இரவு 9.00 வரை எசு.பி.எசு.திருமண மண்டபம், சைதாப்பேட்டை, சென்னை 15

புதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா

ஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 முற்பகல் 10.00 சாவகச்சேரி, ஈழம் புதிய சுதந்திரன் இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா

இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்  புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் ‘பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு’ என்ற சொல்லாட்சியையும், முறையீடு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்து எழுநூற்று ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவிய முறையில் ஒருங்கிணைந்த 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த திசம்பர் 8 ஆம் நாளன்று ஐ.நாவில் அளித்துள்ளனர். இது…

வா, தமிழா! தமிழா! – நக்கீரன் பாலசுப்பிரமணியம்

வா, தமிழா! தமிழா!   வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் வாளெடுத்து வா தோழா அந்தப் பகையை வென்று முடிப்போம் தோள்கள் சேர்த்து வா தோழா நம் தேசத்தைக் காத்திடுவோம் எமனையும் கண்டு அஞ்சோம் பனங்காட்டுப் புலியிது என்போம் நெற்றியில் இந்த மண்ணை நாம் திலகமாகச் சுமந்திடுவோம் வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் ஆயிரம் நாடுகள் அன்று நம்மைச் சுற்றியழித்தது பழங்கதையே தீரத்துடன் நாம் நின்று இனி வெல்லப்போவது புதுக்கதையே…

ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3   ஒரே பொருளைச் சுட்டும் பல்வேறு சொற்களும்  பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரே சொல்லும் உள்ள நிலைமை அனைத்து மொழிகளிலும் காணப்பெறும் இயல்புதான்.  இந்நிலைமையைத் தமிழிலும் மிகுதியாய்க்; காண்கிறோம். இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருளை உணரும் நிலை வெளிப்படையாய் இருப்பின் குறையொன்றும்  இல்லைதான். ஆனால், அதே நேரத்தில் பொருளை உணரும் இடர்ப்பாடு இருப்பின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்த வேண்டியது இன்றியமையாதது அல்லவா?   ஒரு சொல்-பல்பொருள் என்ற நிலைமை கலைச்சொற்களைப் பொருத்தவரை தவிர்க்கப்பட்டாக  வேண்டும். கலைச்சொற்கள் குழப்பமின்றித்…

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 – நாகலட்சுமி சண்முகம்

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3  தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல்.   வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள்! அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன்! வணக்கம்! பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆக்கும் படைப்பாளிகளுக்கான இவ்விருது ஆண்டுதோறும் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் செய்திக்குறிப்பைப் பார்த்துவிட்டு இதற்காக…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 – கருமலைத்தமிழாழன்

(யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8   அவையோர் வணக்கம் மாநாட்டை   அமைத்தளித்த  முத்துசிதம்பர  சான்றோரை மாநாட்டில்  பங்கேற்ற  மாத்தமிழ்  பேராளர் மன்றில் கவிபாடும்  கவிஞர்கள்  அனைவரையும்  வணங்கி மகிழ்கிறேன்   கவியரங்கக்  கவிதை ஈரமண்ணாய்    மனம்கசிந்து   வீட்டுப்   பக்கம் இருப்போரின்    துயரினிலும்   பங்கு   கொண்டு வேரடியாய்   அன்புதனில்   கிளைய    ணைத்து வெறுப்பின்றிக்   கூட்டமாக    ஒன்றி    ணைந்து தூரத்தே   அடிபட்டு   வீழ்ந்த   வர்க்கும் துடிதுடித்தே   ஓடிப்போய்   உதவி   செய்தும் பாரத்தைப்   பிறருக்காய்    சுமந்து   நின்ற…

ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் – எழில் இளங்கோவன்

ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்! யார் இவர்? ‘‘வடஇந்தியாவின் வரலாறே இந்தியாவின் வரலாறு. தென்னாட்டின் சரித்திர உண்மைகளைக் கைவிட்ட காலம். அந்த நாளில் கல்வெட்டுகளின் துணைகொண்டு, (தென்னாட்டு) வரலாறுகளைத் தொடர்ந்து எழுதத் தொடங்கியவர் சதாசிவப்பண்டாரத்தார்’’ அறிஞர் மு.அண்ணாமலையின் அறிமுகம் இது. அந்தக் காலங்களில் வரலாறுகளை ஆங்கிலத்தில் எழுதுவார்கள். தமிழில் வரலாறுகள் மிகக் குறைவாகவே இருந்தன. அதனை உடைத்துத் தமிழில் வரலாறுகளைத் தொடர்ந்து எழுதியவர்களுள் முதன்மையானவர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். குறிப்பாக அவரின் கல்வெட்டுச் சான்றுகளும், செப்பேட்டுச் சான்றுகளும் மிக நுட்பமானவை. 1956ஆம்…

சுந்தரச் சிலேடைகள் 15. தாமரையும் பெண்ணும் – ஒ.சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 15 தாமரையும் பெண்ணும் கூம்பி  விரிதலால், கூடை சுமத்தலால், தேம்பி அழுதலால் , தேனடையாம் – தாம்பதற்கும் வாசம் பலதந்து வாழ்வில் சிறக்கின்ற நேசமிவள்  தாமரைக்கு ஒப்பு . பொருள் தாமரை   இரவில் கூம்பிப் பகலில் விரியும். 2 )  தாமரை மலர்களைப் பறித்து விற்பனைக்குக் கூடைகளில் கொண்டு செல்வர் . 3 ) அலைகளின் மோதலால் தாமரை அசைவது தேம்புவது போன்றும், மலரில் அலைநீர் பட்டு வழிவது அதன் கண்ணீர் போன்றும் தோன்றும் . 4…