மாற்றுத் திறனாளிகளைக் காப்போம் – தி.வே. விசயலட்சுமி 

  மாற்றுத் திறனாளிகளைக் காப்போம்!   உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் அருவினையை/சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அருவினைகள் பல என்றே சொல்லலாம். சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர். கண்பார்வையற்ற கிரேக்கக் கவிஞர் ஓமர், இலியம், ஒடிசி போன்ற காவியங்களைப் பாடி இறவாப் புகழ் பெற்றனர். தமிழகத்தில் அந்தகக்கவி வீரராகவர் போன்ற எண்ணற்றோர் தீந்தமிழ்ப் பாக்களைத் தீட்டியுள்ளார்.   பார்வையற்ற, காது கேளாத, பேச வியலாத பெண்மணி எலன் கெல்லர் ஆடம் என்ற அமெரிக்க…

ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு

 “தம்பி, எழுந்திரம்மா கண்ணா! நேரம் ஆகுதல்லவா?” “கொஞ்சம் பொறுங்கள் அம்மா!” “என்னப்பா இது! பாட்டுப்போட்டிக்குப்போக வேண்டுமல்லவா?  அப்பாவும் நானும், முன்பே  எழுந்து குளித்துப் புறப்பட்டு உன்னுடன் சாப்பிடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம்!. நீ, இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே!”  “இல்லையம்மா! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. போட்டிக்கு எதற்குப் போகவேண்டும்?” (அப்பா, வந்துகொண்டே) “சுடர், வழக்கமாக இந்நேரம் குளித்து முடித்து இருப்பாய்! போட்டிக்குப் போக வேண்டிய நேரத்தில் ஏன் படுத்துக் கொண்டு உள்ளாய்! எழுந்திரு! எழுந்திரு! எரிச்சல் பறந்துவிடும்!”  “நான்,போட்டிக்கு வரவில்லையப்பா!” “என்ன வரவில்லையா? நீதானே…