எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4 தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5 இவ்வாறு செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் தொடர்கள் சிலவற்றைப் பார்ப்போம். 50. ஊழியர்களைத் தேர்வு செய்தனர். 51. 16 பேரைக் கைது செய்தனர். 52. புதிய ஆட்களைத் தேர்ந்தெடுத்தனர். 53. நடவடிக்கையைக் கைவிடு. 54. விடுமுறையைக் குறை. 55. புதுமுறையைப் பின்பற்று. 56. நடைமுறையைக் கவனி. 57. அமைப்பைச் சேர்ந்தவர்கள். 58. கோசுட்டியைச் சேர்ந்தவர்கள். 59. கும்பலைச் சேர்ந்தவர்கள். 60. தமிழகத்தைக் கடும் வெயில் வாட்டுகிறது. 61. நிதியுதவியைப் பெற்றுக் கொண்டார். 62. ஆகியவற்றைப் பார்வையிட்டார். 63. போட்டியிடாததைத் தொடர்ந்து … 64. பெயரைப் பரிந்துரைத்தால் … 65. பயிர்களைச்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4 : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4 (இங்குள்ள கோப்புகளின் அடிப்படையிலும் பொதுவாக நாம் பயன்படுத்தும் தொடர்களின் அடிப்படையிலும் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம்.) 1. மேலாளரைக் கண்டாயா? 2. ஆட்சியரைச் சந்தித்தேன். 3. ஆலையைத் திறக்க வேண்டும். 4. செயலரைப் பார்க்கவில்லை. 5. அணையைத் திறந்து விடுக. 6. மருத்துவமனையைப் பார்வையிட்டார். 7. தடுப்புமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 8. தொற்று நோய்களைத் தடுக்க வேண்டும். 9. பதிவேடுகளைப் பேண வேண்டும். 10. வேலையைச் செய்யத் தவறாதே. 11. கிடங்கினைப் பூட்டவும். 12. மருந்துகளைக் கொடு. 13. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திரு. 14. முதலியவற்றைக் கொணர…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3: இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3 *** இக் கோப்பில் 6 வது விழா எனக் குறிக்கப்பட்டுள்ளது. எண்ணுடன் சேர்த்துப் படித்தால் ‘ஆறுவது விழா’ என வருகிறது. ஆறுவது சினம் ஆக இருக்கட்டும்; விழாவாக வேண்டா. ஆறாவது விழா என்பதை 6-ஆவது விழா என்றே குறிக்க வேண்டும். ’வது ’ என்னும் சொல் ‘வரன்’ என்பதற்கு எதிர்ச் சொல்லாகும். பெண்ணிற்கு ‘வரன்’ பார்ப்பது போல் பலர் தவறாகப், ‘பையனுக்குப் பெண் பார்ப்பதற்கும்’ ‘வரன்’ பார்க்கிறேன் என்பார்கள். ‘வது’ என்னும் சொல்லை மறந்ததால்தான் பார்வை மடல்களின் எண்ணிக்கை, ஆண்டு எண்ணிக்கை முதலியன போன்று எண்ணிக்கை வரிசை முறையைக் குறிப்பிடுகையில் எண்ணையும் எழுத்தையும் இணைத்து…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! -2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 – தொடர்ச்சி) Jan 5, 2011 எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! -2 ** இந்தக் கோப்பிலுள்ள மடல்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அரசு மடல்கள், ஆணைகளில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் தனியார் அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பிட வேண்டும் என்ற உணர்வு இயல்பாய் அமைதல் வேண்டும். தமிழராய் இருந்தாலும் இல்;லாவிட்டாலும் அரசு, அரசு சார் பணிகளில் உள்ள ஒவ்வொருவரும் அரசாணைக்கு இணங்கத் திருவள்ளுவர் ஆண்டு குறிக்க வேண்டும். எழுத்துப் பணியினர் குறிக்க மறந்தாலும்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
சன. 4, 2011 எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 பேரன்புசால்அவையோருக்கு, வணக்கம். பல்வகைப்பட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் இங்கே கூடியுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இங்கே நாம் வெறும் பொழுது போக்கிற்காகக் கூடவில்லை; பயன் ஆக்கத்திற்காகக் கூடியுள்ளோம். ‘உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றி யாவும் நம் வெற்றி’ என்ற எண்ணத்தில் கூடியுள்ளோம்; இன்றைய கலந்துரையாடல் மூலம் நம்மிடையே எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் கூடியுள்ளோம். தமிழ் தனக்குரிய நிலையை மீளப் பெறுவதற்கு நம் சந்திப்பு ஓர் உந்துதலாய் அமையும்; இலக்கை அடைவதற்குரிய பாதையில் முன்னேறிச் செல்ல உதவும்….