எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? இலக்குவனார் திருவள்ளுவன் எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? எள்ளத்தனைத் துயரமும் முடியவில்லை. ஆண்டுகள் முடிந்தாலும் துயரங்களுக்கு முடிவில்லையே! பல நாடுகளில் போர்கள். அதனால் வேறுபல நாடுகளிலும் போர்களால் பாதிப்புகள். உலகெங்கும் போர் அச்சுறுத்தல்கள். “கெட்டபோரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்” என்னும் பாவேந்தர் பாரதிதாசன் குரல்போல் பலரும் குரல் எழுப்பத்தான் செய்கின்றனர். ஆனால் போர்களுக்கு முடிவில்லையே! அணுக்குண்டுகளின் அழிவுகளைப் பார்த்த பின்னும் அணுக்குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றனவே! போர்களில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என எல்லாத் தரப்பு மக்களும் கொல்லப்படுகின்றனரே!…