கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 79 : எழிலியின் கையறுநிலை தொடர்ச்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 78 – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை – தொடர்ச்சி தருவது தொழிலாக் கொண்டது தமிழகம் அயன்மொழி பலவும் ஆய்ந்து தெளிந்து மயலற மொழியும் மாந்தர் பற்பலர் எம்முடை நாட்டினில் இலங்கிடல் காணுதி!           எம்மொழி யாயினும் எம்மொழி என்றதை  125           நம்பும் இயல்பினர் நாங்கள்; இந்நிலை அறிகதில் ஐய! அமிழ்தெனும் தமிழை மறந்தும் பிறமொழி மதிக்கும் பெற்றியேம்; ஆயினும் தமிழை அழிக்கும் கருத்தின்                   சாயல் காணினும் தரியேம் எதிர்ப்போம்;    130 பிறமொழி…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 78 : எழிலியின் கையறுநிலை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77 – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை – தொடர்ச்சி          எழிலியின் கையறுநிலை           `பெயருங் கூத்தன் பெருவளி தன்னால் உயர்கலம் மூழ்கி உயிர்துறந் தான்’என                 உயிர்பிழைத் துய்ந்தோர் வந்தீங் குரைத்த  60           கொடுமொழி செவிப்படக் கொடுவரிப் புலிவாய்ப் படுதுயர் மானெனப் பதைத்தனள், கதறினள்; துடித்தனள், துவண்டனள், துடியிடை கண்ணீர் வடித்தனள், `என்னுடை வாழ்வில் வீசிய                பெரும்புயல் விளைத்த துயரம் பெரிதே!      65           மாலுமி இல்லா மரக்கலம் ஆகிப்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77: 16. எழிலியின் வரலாறறிந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 76 : தமிழிசை தழைக்கும் – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை இசைச் செல்வி           கன்னித் தமிழின் நன்னலங் காப்போய்! தன்னலம் விழையாத் தையல் எழிலிதன் திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கேண்மோ! அறமனச் செல்வி, அழகின் விளைநிலம்               எழிலி எனும்பெயர்க் கியைந்தவள், அவள்தான்  5           இசையால் உறுபே ரிசையாள், பிறமொழி இசேயே பாட இசையாள், தமிழில் ஒன்றெனும் இயலும் ஓதித் தெளிந்தவள், மன்றினில் நிறைவோர் மகிழ்ந்திடப் பாடலில்              ஒன்றிய பொருளின்…