மறக்க முடியுமா? பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் – எழில்.இளங்கோவன்

பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் ‘‘மாணிக்கச் சிந்தனைகள், எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்தைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடம் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்’’ ஆகிய பண்புகளுக்குச் சொந்தக்காரர், பேரறிஞர் பெருந்தகை, பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் என்று நினைவு கூர்கிறார் அவரின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். தேர்ந்த சிந்தனையாளர், தெளிந்த உரையாசிரியர், திறன்மிகு உரைநடையாளர். ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர், பழைமை&- புதுமை இரண்டையும் ஒருமித்துப் போற்றியவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள். இவர் தி.பி. 1948 சித்திரை 05 – 1917ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 17ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தார்….

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – எழில்.இளங்கோவன்

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) கவியோகி சுத்தானந்த பாரதியார் ஒருவரை இப்படிப் பாராட்டுகிறார்: “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை. தமிழின் இன்பம் நுகர வேண்டுமானால், சேதுப்பிள்ளையின் செந்தமிழைப் படிக்க வேண்டும்” யார் இந்தச் சேதுப்பிள்ளை? “தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேது(ப்பிள்ளை). சொல்மாரிச் செந்தமிழ்ச் சொற்கள் நடம் புரியும். எதுகையும் மோனையும் பண்ணிசைக்கும். சுவைதரும் கவிதைகள் மேற்கோளாகும். எடுப்பான நடையில் நின்று, நிதானித்து அவரின் சொற்பொழிவு இருக்கும்.” இப்படி அறிமுகம் செய்கிறார் சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)யை, பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். திருநெல்வேலி மாவட்டம் இராசவல்லிபுரம் என்ற ஊரில் பங்குனி 20,…

மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற என் நண்பர் ஒருவர் நல்ல படிப்பாளி, நிறைய படித்திருக்கிறார். அவரிடம் நான் கேட்டேன், “பூ.ஆலாலசுந்தரனார் குறித்து உங்களிடம் செய்தி ஏதாவது இருக்கிறதா?” அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்” சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது!” இப்படிச் சொன்னார்…

பேராசிரியர் கா.சு.(பிள்ளை) – எழில்.இளங்கோவன்

பேராசிரியர் கா.சு.(பிள்ளை)   ஓலைச் சுவடிகளுள் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான உ.வே.சாமிநாதரின் மாணவர்.  திராவிட இயக்கத் தலைவர்களான நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் ஆசிரியர்.  தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் பரிந்துரையால், சென்னை  சட்டக் கல்லூரியில் பேராசிரியராக அமர்த்தப் பட்டவர்.  நீதிக் கட்சியின் அன்றைய உறுப்பினர்களுள் ஒருவரான எம்.ஏ. முத்தையா (செட்டியார்) அவர்களால் பாராட்டப்பட்டு, தமிழ்ப் பணிக்கான செப்புப் பட்டயம் பெற்றவர்.  சென்னைப் பல்கலைக் கழகத்தின், சென்னை மாகாணக் கலைச் சொல்லாக்கக் குழுவின் …

மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை : எழில்.இளங்கோவன்

  மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை  இவர் எந்த ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பேராசிரியராகப் பணியாற்றவில்லை. தொழில் முறைப் பேராசிரியராகக் கூட இருந்ததில்லை. ஆனாலும் இன்றும் கூட அறிவுத் தளங்களில் இவர் பேராசிரியர் என்றே அழைக்கப்படுகிறார் என்பது இவரின் பெருமைக்குச் சான்று.  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இவரின் சொந்த ஊர். கார்த்திகை 22, 1938 / 7-.12.-1907 அன்று இவர் பிறந்தார்.  திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பயின்ற இவர் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.   பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட…

மறக்கமுடியுமா? – ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) :- எழில்.இளங்கோவன்

மறக்கமுடியுமா?   ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடுதான் இவரின் சொந்த ஊர். தொழில்  தொடர்பாக, நாஞ்சில் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து, கேரளம் மாநிலம் ஆலப்புழையில் குடியேறியவர்கள் பெருமாள்பிள்ளை, மாடத்தியம்மாள்  இணையர். இவர்களின் மகனாக ஆலப்புழையில் பங்குனி 23, 1886 / 1855ஆம் ஆண்டு ஏப்பிரல் 4ஆம் நாள் பிறந்தவர் ‘மனோன்மணீயம்’ பெ.சுந்தரம்(பிள்ளை). தமிழ் மொழி இயல், இசை, கூத்து என மூன்று பிரிவுகளைக் கொண்டது. கூத்து என்பது நாடக வடிவத்தின் பெயர். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற…

மறக்க முடியுமா? – ஔவை துரைசாமி – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி   கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை சு.துரைசாமி(பிள்ளை) அவர்கள். கவிஞர் சுந்தரம்(பிள்ளை), சந்திரமதி அம்மையாரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் இவர். பிறந்த ஆண்டு  : ஆவணி 21, 1933 / 1902 செட்டம்பர் 5. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் ஔவையார் குப்பம்…

ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் – எழில் இளங்கோவன்

ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்! யார் இவர்? ‘‘வடஇந்தியாவின் வரலாறே இந்தியாவின் வரலாறு. தென்னாட்டின் சரித்திர உண்மைகளைக் கைவிட்ட காலம். அந்த நாளில் கல்வெட்டுகளின் துணைகொண்டு, (தென்னாட்டு) வரலாறுகளைத் தொடர்ந்து எழுதத் தொடங்கியவர் சதாசிவப்பண்டாரத்தார்’’ அறிஞர் மு.அண்ணாமலையின் அறிமுகம் இது. அந்தக் காலங்களில் வரலாறுகளை ஆங்கிலத்தில் எழுதுவார்கள். தமிழில் வரலாறுகள் மிகக் குறைவாகவே இருந்தன. அதனை உடைத்துத் தமிழில் வரலாறுகளைத் தொடர்ந்து எழுதியவர்களுள் முதன்மையானவர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். குறிப்பாக அவரின் கல்வெட்டுச் சான்றுகளும், செப்பேட்டுச் சான்றுகளும் மிக நுட்பமானவை. 1956ஆம்…

மறக்க முடியுமா? : நாரண துரைக்கண்ணன் – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? : நாரண துரைக்கண்ணன் உ.வே.சாமிநாதரின் கையெழுத்துப் படிகள் அச்சிடுவதற்காக ஆனந்த போதினி அச்சகத்திற்கு வந்தன. அந்தக் கையெழுத்துகளைப் படித்துப் பார்த்த அச்சகப் பொறுப்பாளர் சீவா, அதில் சில பிழைகளைக் கண்டு, அவற்றைத் திருத்தி அச்சுக்கு அனுப்பிவிட்டார்.   சற்றுத் தாமதமாக அப்பிழையை உணர்ந்த உ.வே.சா, தன் உதவியாளர் இராசகோபால(ஐயங்கா)ரை அனுப்பித் திருத்தி வரச்சொன்னார். இராசகோபால் அச்சகம் வந்தபோது, படிகள் அச்சாகி இருந்த-குறிப்பிட்ட பிழைகள் திருத்தத்துடன்.  சீவாவின் தமிழறிவை வியந்த இராசகோபால், சீவாவை உ.வே.சாவிடம் தமிழ் கற்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஆனால்…

மறக்க முடியுமா? பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்   சங்க இலக்கியங்களைப் பெருமளவு பதிப்பித்து வெளியிட்ட பெருமை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சேரும்.  இக்கழகத்தின் ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையா(பிள்ளை)அவர்கள் தேர்ந்த உரையாசிரியர்களைக் கொண்டு சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதவும், வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டு வரலாறு – ஆய்வு நூல்களையும் எழுதவும் பெரும் காரணமாக இருந்தவர்.   இவரால் மிகச் சிறந்த உரையாசிரியர்களாகத் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பெரும் புலவர்களுள் ‘பெருமழை’ பெ.வே.சோமசுந்தரரும் ஒருவர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேலப்பெருமழை என்ற ஊர்தான்…

மறக்க முடியுமா? – மயிலை சீனி. வேங்கடசாமி : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – மயிலை சீனி. வேங்கடசாமி  சில நாள்களுக்கு முன்னர், மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களைப்பற்றித் தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தன் ஒரு நிமிடச் செய்தியில் நினைவு கூர்ந்தார். தமிழுலகம் மறக்கக் கூடாத அறிஞர்களுள் மயிலையாரும் ஒருவர்.  மயிலை சீனிவேங்கடசாமி மார்கழி 02, 1931 / 1900ஆவது ஆண்டு  திசம்பர் 16ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.   இவரின் கல்வி 10ஆம் வகுப்பு வரைதான். பின்னர் இடைநிலை ஆசிரியராகவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.   படித்தது பத்தாம் வகுப்பு…

தை மகளே! தமிழியத்தால் தகர்ப்போம் பகையை! – எழில்.இளங்கோவன்

தை மகளே! தமிழியத்தால் தகர்ப்போம் பகையை!    கீழ்வானக் கடல்முதுகில் கிளம்பும் நெருப்புக் கோளத்தின் கதிர்விரியக் கிழக்கு திக்கும்! ஆழ்கடலின் முத்துகள் ஆடும் கொற்கை அரியணையில் தமிழ்வீற்று ஆளும் கூடல்! வாள்பறக்கும் படைகிளம்பும் வெண்ணி தொட்டு வான்முட்டும் இமயத்தை வாளால் தொட்டார்! தாள்தொட்டார் இல்லையெனத் தமிழர் கூட்டம் தோள்தொட்டார்; தைப்பாவாய் தோளே தொட்டார்!   ஆரியத்தால் வீழ்ந்தோம்நாம்! அன்று சொன்ன ஆதிவேதம் புராணக்கதை அங்கே வீழ்ந்தோம்! போரிட்டால் வென்றிருப்போம்; பூனூல் தொட்டுப் பேரமைச்சே! இராசகுரு! போற்றி என்று வேரற்ற மரம்போல வீழ்ந்தோம் அங்கும்! வகுத்துரைத்தான் நால்வருணம் வீழ்ந்தோம் அன்றும்! தாருற்ற தைப்பாவாய் தோல்வி யில்லை திராவிடத்தால் எழுகின்றோம் தோற்ப தில்லை!   திராவிடத்தால் எழுந்தோம்நாம் தேட்டை செய்யும் தறுக்கரைநாம் திராவிடத்தால் தள்ளி வைத்தோம்! “ஆரடாநீ சாதிசொல்ல? அற்ப மூடன் ஆரடாநீ பெண்ணினத்தை அடிமை யாக்க? ஆரடாநீ மனுவாதி? அவனின் நூலை அனலிட்டுக் கொளுத்துங்கள்; அறிவும் மானம் தேறப்பா” ஈரோட்டில் தெறித்தார் தந்தை தைமகளே தமிழியத்தால் தகர்ப்போம் பகையை!   தமிழியம்தான் ஆரியத்தைத் தோற்க டிக்கும் தமிழியமே ஆரியமாய்த் தோன்றா மட்டும்! தமிழகத்தில் மதவாதத் தலைமைக் காகத் தமிழரிடம் சாதிவெறி தலைவி ரிக்க இமைகொட்டா விதைக்கிறது இந்துக் கூட்டம்; எதிர்த்திடுவோம்! பெரியாரின் இடது சாரித் தமிழியம்தான் பெருநெருப்பு; தமிழர் மானம்! தைப்பெண்ணே! தமிழ்க்கண்ணே! தமிழால் வாழ்த்து!   வாமகளே தைப்பாவாய் வா!வா! உன்னை வாழ்த்துகின்ற தமிழரைநீ வந்து வாழ்த்து! மாமகளே! தமிழ்ப்பிறப்பே! மலர்கண் தேனே! மாவிலையும் செங்கரும்பும் மழலைக் கூத்தும் கோமகளின் வளையிசையில் குலுங்க; வாசல் கோலத்தில் புதுப்பானை; கொதிக்கும் பொங்கல்; வாமகளே தைப்பாவாய்! வந்து வாழ்த்து! வளம்பெருக நலம்சிறக்க வாழ்த்து பாவாய்!   எழில்.இளங்கோவன்