வெருளி நோய்கள் 529-533: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 524-528: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 529-533 ஏமாற்றம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏமாற்ற வெருளி.இவ்வெருளி உடையோர் எண்ணங்கள் நிறைவேறாமற் போதல், நம்பிக்கைக் குலைவு, மனமுறிவு, மனக்கசப்பு, தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி போன்றவற்றிற்கு ஆளாகின்றனர்.00 ஏரி அல்லது சதுப்பு நிலம் குறித்துக் காரணமின்றி வரும் அச்சம் ஏரி வெருளி.ஏரி அல்லது சதுப்பு நிலத்தில் மூழ்கிவிடுவோம், ஏரி நீர் துன்பம் தரும், ஏரி உடைப்பெடுக்கும், ஏரி வறண்டால் வேளாண்மை முதலியன பாதிப்புறும் முதலிய கவலைகளுக்குத் தேவையின்றி ஆளாகி அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.Limne…