(வெருளி நோய்கள் 534-538: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 539-543  539. ஐசுலாந்து வெருளி-Islandophobia ஐசுலாந்து(Island) தொடர்பானவற்றில் காரணமின்றிப் பேரச்சம் கொள்வதே ஐசுலாந்து வெருளி. ஐசுலாந்து நாடு, ஐசுலாந்து மக்கள், அவர்களின் நாகரிகம், பண்பாடு, பொழுதுபோக்கு முதலியன என ஐசுலாந்து தொடர்பானவற்றில் காரணமின்றி வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர். 00 540. ஐந்தாய ஆட்ட வெருளி -Yahtziphobia ஐந்தாய ஆட்டம்(the game Yahtzee) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஐந்தாய ஆட்ட வெருளி. ஐந்து ஆயம்(தாயக்கட்டை/கவறு//பகடைக்காய்) கொண்டு விளையாடும் ஆட்டம் ஐந்துஆய>ஐந்தாய ஆட்டம். 00 541. ஐந்தாம் எண்…