கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும்வழி -தொடர்ச்சி) பூங்கொடி எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ இனமும் மொழியும் ஏற்றமுற் றோங்க மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன், அருளறம் பூண்டது குறளகம், ஆதலின் 290 தெருளும் அனையொடு சேர்ந்தவண் உறைவேன்; ஒருதலைக் காமம் நிறைஎனப் படுவது இருதிறத் தார்க்கும் பொதுவென நினையாப் புன்மனம் தாங்கி ஆடவர் திரியின் யானென் செய்வல்? ————————————————————— முரணினர் – மாறுபட்டனர், உரி – தோல்…
