சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க!  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24 வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! “வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை ஆகுமதி”               புறநானூறு – 27 : 15 – 17 பாடியவர் :  உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன் :  சோழன் நலங்கிள்ளி. திணை :   பொதுவியல். துறை :   முதுமொழிக் காஞ்சி. வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும்…

வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு – அ.சிதம்பரநாதன்

வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு   சங்கக்காலத் தமிழ்ப் புலவர்கள் மக்கள் வாழ்வில் அமைந்த நல்லியல்புகளையே தம் பாடல்களிற் பாராட்டினார்கள். தீமை செய்வோர் வேந்தராயினும் அஞ்சாது இடித்துரைத்து அவரைத் திருத்தினார்கள். இங்ஙனம், ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்’ இவையென உள்ளவாறு விளக்கி, மக்களுக்கு நல்லுணர்வு வழங்கிய நல்லிசைப் புலவர்களுடைய உள்ளத்துணர்ச்சிகளின் பிழம்பாகவும், சங்கக்காலத் தமிழகத்தின் வரலாற்று நூலாகவும் திகழ்வது புறநானூறு. -முனைவர் அ.சிதம்பரநாதன்:  ஒளவை சு.துரைசாமியின் புறநானூற்று உரைக்கான அணிந்துரை