(வெருளி நோய்கள் 569-573: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 574-578 574. ஒறுப்பு வெருளி- Rhabdophobia/ Rhobdophobia/ Mastigophobia/Poinephobia தண்டனை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒறுப்பு வெருளி. குறைகூறப்படுவோம், தண்டிக்கப்படுவோம், கழி, கம்பு, தடி, கம்பி, கோல், மந்திரக்கோல்  போன்றவற்றால் அடிக்கப்படுவோம் என்றெல்லாம் காரணமின்றி அச்சம் கொள்வர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு தண்டனை பற்றிய பேரச்சம்  கொள்வோர் உள்ளனர். பெரும் பெருங் குற்றங்கள் புரிந்து விட்டுச் செல்வாக்கால் தப்பித்து விட்டு அச்சம் இன்றி இருப்போரும் உள்ளனர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல்…