வெருளி நோய்கள் 584-588: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 579-583: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 584-588 585. ஓநாயன் வெருளி – Lupophobia / lycophobia/ Lukophobia ஓநாய்/ஓநாய்மனிதன்/ஓநாயன் (werewolf)பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் ஓநாயன் வெருளி. ஓநாய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில்தான் சேர்த்துள்ளனர். ஓநாய்போன்ற மனிதன் எனவே, ஓநாயன் எனப்படுகிறான். lupus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் lykos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருளும் ஓநாய். 00 586. ஓமர் வெருளி – Homerphobia புனைவுரு ஓமர் (Homer Simpson) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓமர் வெருளி. அமெரிக்க அசைவூட்டத்…
