வெருளி அறிவியல் 499-503 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 494-498: தொடர்ச்சி) வெருளி அறிவியல் 499-503 எபிரேயர்/(இ)யூதர்கள்(Jews) மீதும் இவர்கள் தொடர்பானவை மீதும் ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் எபிரேயர் வெருளி.எபிரேய இனத்தைச் சேர்ந்த (இ)யூதம் என்னும் சமயத்தைப் பின்பற்றும் இவர்கள் மீது ஈவிரக்கமற்றவர்கள், அளவுகடந்து சூழ்ச்சி செய்து ஏமாற்றுபவர்கள், எவரையும் எளிதில் நம்பாதவர்கள் என்றெல்லாம் எண்ணுபவர்கள், இவர்கள் மீது வெறுப்பும் அச்சமும் கொள்கின்றனர்.1096இல் நடைபெற்ற முதலாம் சிலுவைப் போர், 1290இல் பிரித்தானியாவிலிருந்து எபிரேயர் /(இ)யூதர்கள் வெளியேற்றப் பட்டமை, 1391 இல் எசுபானியாவில் எபிரேயர் / (இ)யூதப் படுகொலை நிகழ்ந்தது, 1492இல் எசுபானியாவிலிருந்து…
குன்றியாளும் பிறரும் – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 22 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 21. தொடர்ச்சி) 12.குன்றியாள் குன்றியனார், குன்றியன் (குறுந்தொகை 51) என ஆண்பாற்கண் வருதல்போலக் குன்றியாள் எனப் பெண்பாற்கண் வந்தது. இவர் பாடியது குறுந்தொகையில் 50-ஆம் பாட்டாகும். இவர் குன்றியனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார். — 13. வருமுலையாரித்தி இவர், பெயர்க்கண் உள்ள வருமுலை யென்னும் அடையாற் பெண்பாலராகக் கருதப்படுகின்றார். இவர்பாடியது குறுந்தொகையில் 176-ஆம் பாட்டாகும். அஃதாவது, ‘ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்னன்னர் நெஞ்ச நெகிழ்ந்த…
