வெருளி நோய்கள் 594-598: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 589-593: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 594-598 594. கடமான் வெருளி-Alkiphobia கடமான் (moose) பற்றிய பேரச்சம் கடமான் வெருளி. அல்செசு(Alces) என்பது காட்டுமானின் அறிவியல் பெயராகும். ஐரோப்பாவில் இலத்தீன் மூலச் சொல்லான எல்கு(elk) என அழைக்கப்பெறுகிறது. எல்கு என்பது அல்கி என மருவியிருக்கிறது. 00 595. கடமை வெருளி-Paralipophobia கடமை ஆற்றாமல் அஞ்சி விலக்கி வைத்துக் கடமை தவறுவது, கடமை (வெருளி. தனக்குரிய கடமையை ஆற்ற முடியாது என்று சோர்ந்து இருப்பதும் மிகுதியாக உள்ளது எப்படிச் செயலாற்ற முடியும் என்று கலங்கி…
