தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 கடலில் மறைந்த குமரிக்கண்டம் தமிழின் தொன்மையை ஏற்பதன் மூலமும் தமிழின் தாய்மையை உணரலாம். இந்தியப் பெருங்கடலாகச் சொல்லப்படும் குமரிக்கடலில் மறைந்த நிலப்பகுதியே குமரிக்கண்டம் அல்லது இலெமூரியாக் கண்டம். இங்குதான் மனித இனம் தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். இங்குள்ள மக்கள் பேசிய மொழி தமிழே என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புறத் தமிழ்ப்பகைவர்களும் அகத்தமிழ்ப்பகைவர்களும் தமிழின் பெருமையை மறைக்கும் வகையில் குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகளையே புனைகதைபோல் திரித்துக் கூறி வருகின்றனர்….