மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் – அன்றே சொன்னார்கள் 31: இலக்குவனார் திருவள்ளுவன்

( எழுத்தைக் காப்போம் !    – தொடர்ச்சி) மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் கடிகாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான கிளாக்கு (clock) மணி என்னும் பொருளைத் தரும் கிளோக்கா என்னும் செல்திக்கு (Celtic Language) சொல்லில் இருந்து உருவானது. மணி என்பது முதலில் ஒலிக்கும் மணியைக் குறித்தது. மணி அடித்து நேரத்தை அறிவித்ததன் அடிப்படையில் இச் சொல் பின்னர் மணியைக் குறிப்பதாக மாறியது. பீட்டர் என்கின் என்னும் பூட்டுத் தொழிலாளி கி.பி.1510இல் நிலைக் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். கி.பி.1656இல் இயூயன்சு என்னும் ஆலந்து நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஊசல்…

சுந்தரச் சிலேடைகள் 3. இதயமும் கடிகாரமும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் இதயமும் கடிகாரமும் துடித்திடும், உள்ளிருக்கும், தூங்காமல் ஓடும், வடிக்க அழகூட்டும், வாழ்வில்-படியாத மாந்தருக்கும் பாங்காகும் மாகடி காரமும் , சாந்த இதயமும் சான்று. பொருள்: இதயம் 1)இதயம் துடிக்கும் 2) உயிர்களின் உடலுக்கு உள்ளே பாதுகாப்பாக அமைந்திருக்கும். 3) நாம் தூங்கினாலும் அதுதூங்காமல் இயங்கிக் கொண்டிருக்கும். 4) வரைந்து பார்த்தால் அழகாக இருக்கும். 5) படித்தவர், படியாதவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் அமைந்திருக்கும். கடிகாரம் 1) துடிக்கும் 2) கண்ணாடிக்குள் இருக்கும். 3) தூங்காமல் ஓடும் 4) வரைந்து…

காலப்பொறி படைத்தவர் தமிழரே!

காலப்பொறி படைத்தவர் தமிழரே!   “யாண்டும், மதியும், நாளும், கடிகையும்” எனவரும் சிலப்பதிகார அடிகளால் நாழிகையை அளவிடும் கருவி ‘கடிகை’ என அழைக்கப்பட்டதை அறியலாம். இக்கடிகை ‘ஆரம்’ போல் கழுத்தில் அணியப்பட்ட செய்தி “கடிகை ஆரம் கழுத்தில் மின்ன” என்னும் பெருங்கதை வரியால் அறியப்படுகிறது. இக்கடிகை ஆரமே இப்பொழுது கடிகாரம் எனப்படுகிறது.  மேலும், ‘கன்னல்’ என்னும் கருவி மூலம் நேரம் கணக்கிடப்பட்டதை முல்லைப்பாட்டின் மூலம் அறியலாம். நமது நாழிகை வட்டில் பிற நாட்டவராலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பொழுதைய, ஒன்றரை மணி நேர அளவுகொண்ட முழுத்தம் என்பதே…