மின்னூல் பதிவிறக்க – து.நித்யாவின் எளியதமிழில் ‘சிஎசுஎசு’

  விழுத்தொடர் பாணித் தாள்கள்(Cascading Style Sheets -CSS) இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணிணிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் வி.பா.தா.(சி.எசு.எசு.) பெரும்பங்கு வகிக்கிறது. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. ஆசிரியர் : து.நித்யா மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com வலைப் பதிவு: http://nithyashrinivasan.wordpress.com     தமிழில் கட்டற்ற கணியன்கள்பற்றிய தகவல்களைக் “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது. இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழுப் புத்தகமாக…

மின்னூல் பதிவிறக்க : ‘(உ)ரூபி’ – பிரியா சுந்தரமூர்த்தி

  “எளிய இனிய கணினி மொழி” ‘(உ)ரூபி’ க்கு இதைவிடப் பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணையப் பயன்பாடுகள் ‘(உ)ரூபி’ ’யில் எழுதப்படுகின்றன. நிரலைச் சுருக்கமாக எழுதுவதே ‘(உ)ரூபி’ யின் ஆற்றல்வாய்ந்த இயல்புகளில் ஒன்றாகும். கணியன்(software)களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ‘(உ)ரூபி’ யில் உருவாக்க முடியும். ‘(உ)ரூபி’ யின் அடிப்படையையும், பரவலாகப் பயன்படுத்தப்படும் சிறப்புகளையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ‘(உ)ரூபி’ யின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் பரவியிருப்பது அவரது சிறப்பு. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில்…

மின்னூல் : தூண்டுகோல் [சிறுகதைகள்] இரா.பாரதி

தூண்டுகோல் – சிறுகதைகள் – இரா.பாரதி மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – படைப்புப் பொதுவுடைமை / Creative Commons Attribution-Non Commercial-NoDerivatives 4.0 International License. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். அட்டைப்படம் – மனோசு குமார் – socrates1857@gmail.com என்னுரை   படைப்பாளி, தான் காணவிரும்பும் சமுதாயத்தைத் தனது கற்பனைத்திறனைப் பயன்படுத்தி வடித்துக்காட்டுவதுதான் சிறுகதை. எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் சமூகச் சீர்கேடுகளை வெளிப்படையாக எதிர்க்க இயலாத காலக்கட்டத்தில் அவற்றைத் தனது எழுத்தில் வடித்துக்காட்டி சமூகத்தினரை விழிப்புணர்வு அடையச்செய்கிறான். இத்தகைய நோக்கில் பல சிறுகதைகள்…