நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு!

நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு   கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான கண்ணியம் குலோத்துங்கன் ஐயா அவர்கள், நெஞ்சாங்குலை பாதிப்பால் இடருற்றார்; நேற்று (ஆவணி 19,2049-04.09.2018) இரவு குடும்பத்தினரும் தமிழன்பர்களும் தொழிலாளத் தோழர்களும் வருந்தும் வகையில் இவ்வுலக வாழ்வு நீத்தார். அவரது இறுதி வணக்க ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும். நிகழ்விடம்: 2068, கோபுரம் 2 ஆ, மதிப்பு எழில் தோற்றம் (Tower 2 B, Prestige Bella Vista) ஐயப்பன்தாங்கல், சென்னை 600056 (ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் எதிரில்) தொடர்பிற்கு: மகன் குகன்…

தனித்தமிழ் பேசுவோம்!

தாய்த்தமிழ் காத்துயர்வோம்! மக்களால் பேசப்படும் மொழியே வாழும்! நம் தாய் மொழியாகிய தமிழ் தமிழர்களாகிய நம்மில் அறுதிப் பெரும்பான்மையினரால் பிழையாகவும், பிற மொழிக் கலப்புடனும், குறிப்பாக ஆங்கிலக் கலப்புடனும் பேசப்பட்டு வருகின்றது. இதனால், நம் மொழிச் சொற்கள் மறையத் தொடங்கி விட்டன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் சொற்களாகப் பாவித்துப் பேசி வருகின்றனர் நம் தமிழர்கள். எடுத்துக் காட்டுகள் – காஃபி, டீ, ப்ரஷ், பேஸ்ப், சோப், டவல், டிஃபன், லஞ்ச், ஸ்கூல், காலேஜ், ஆஃபீஸ், ஆட்டோ, பஸ், ட்ரெயின். இவ்வாறு ஆங்கிலச் சொற்களையே பேசிக்…