வெருளி நோய்கள் 644-648: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 639-643 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 644-648 644. கதவு வெருளி – Entamaphobia கதவு குறித்த வரம்பற்ற பேரச்சம் கதவு வெருளி. Enta என்றால் உட்புகுதல் எனப் பொருள். உட்புகுவதற்கு வழியாக அல்லது தடையாக உள்ள கதவை இங்கே குறிக்கிறது. ‘Eisodos, portos’ என்னும் கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது Entama. கதவு திறந்திருந்தாலும் அல்லது மூடியிருந்தாலும் கதவு வெருளிக்கு ஆளாகின்றனர். வெளியிட வெருளி(Agoraphobia), அடைப்பிட வெருளி (Claustrophobia), அடைதாழ் வெருளி( Cleithrophobia/Cleisiophobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது. 00 645. கதிராடி…
