வெருளி நோய்கள் 654-658: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 649-653: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 654-658 654. கம்பளி யானை வெருளி – Mammothphobia கம்பளி யானை எனப்பெறும் மிகப்பெறும் யானைமீதான பேரச்சம் கம்பளி யானை வெருளி. அடர்ந்த முடிகளால் உடல் மூடப்பட்டுள்ளதால் கம்பளி யானை எனப்பெறுகிறது. 4.8 பேராயிரம்(மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இனம்.இப்பொழுது இல்லை. எனினும் இதனைப்பற்றிய செய்திகளை அறிய வரும் பொழுது படங்களைப்பார்க்கும்பொழுது பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். Mammoth என்கிற சொல் மன்சி என்ற உருசிய மொழியில் இருந்த MAMOHT mamont என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாகும். ஆங்கிலச் சொல்…
