(வெருளி நோய்கள் 654-658:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 659-663 கரப்பான்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கரப்பான் வெருளி.கரப்பான் பூச்சி பறந்து மேலே விழும், உணவில் விழும், நோய் பரப்பும் என்பன போன்ற அருவருப்பும் கவலையும் அச்சமும் கரப்பான் பூச்சி வெருளிக்குக் காரணமாக அமைகின்றன.கரப்பான் குருதி வெண்ணிறமாக இருக்கும். இதனை இரத்தமாக எண்ணாமல் அடிபட்டிருக்கும் கரப்பானைக் கண்டு அருவருப்பு அடைவர். கரப்பான் பூச்சி உடல் பலபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக் கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன.ஆதலால், இதன் தலையை வெட்டிவிட்டால் கூட இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். எனவே,…