வெருளி நோய்கள் 674-678: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 669-673: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 674-678 674. கருவண்ண வெருளி-Melanophobia கருநிறத்தைக் கண்டு ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கருவண்ண வெருளி. கரு வண்ணத்தைத் துயரத்தின் அடையாளமாகக் கருதுவதாலும் துன்பத்தின் குறியீடாகக் கருதுவதாலும் சிலருக்குக் கரு வண்ணத்தைக் கண்டால் வெறுப்பும் அச்சமும் வருகிறது. பல நாடுகளில் நீதிமன்றங்களில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் முதலானவர்களின் மேலாடையின் நிறம் கருப்பு. இது அங்கே அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனாலும் கருப்பு நிறம் கண்டு பேரச்சம் கொள்வோர் உள்ளனர். கருப்புதான் எனக்குப்பிடித்த வண்ணம் என்ற முறையில் வெற்றிக்கொடி கட்டு என்னும்…
