வெருளி நோய்கள் 679-683: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 674-678: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 679-683 679. கரையான் வெருளி-Isopterophobia கரையான் முதலான மரம் அரிப்புப் பூச்சிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் கரையான் வெருளி. பூச்சிகளால் அரிக்கப்படாத மரக்கலன்கள் என்று உறுதி அளித்தாலும் சிலர் பூச்சிகள் அரிக்கப்படும் என்று பேரச்சத்தில்தான் இருப்பர். 00 680. கலங்கரை விளக்க வெருளி – Hotatsosphobia கலங்கரை விளக்கம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கலங்கரை விளக்க வெருளி. உயர வெருளி உள்ளவர்களுக்குக் கலங்கரை விளக்கவெருளி வருகிறது. 00 681. கலப்பி வெருளி – Blenderphobia/Blendaphobia கலப்பான்/கலப்பி…
