சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 781. Adjudication Committee நீதிமுறைக் குழு எதிர்ம நடவடிக்கை மேல்முறையீடுகளைக் கேட்டுத் தீர்ப்பதற்கு அமைக்கப்படும் இடைக்காலக் குழு. 782. Adjudicative Process தீர்ப்புப் படிமுறை நீதிமுறையில் தீர்மானிக்கும் நெறிமுறை. தீர்ப்புச் செயல்முறை. 783. Adjudicator தீர்ப்பாளர், தீர்ப்பு வழங்குபவர், தீர்ப்பு வழங்குநர் பூசல் அல்லது தகராறு அல்லது போட்டியில் தகுநிலையில் தீர்ப்பளிப்பவர். 784. Adjudicatory Bodies (Adjudicatory Body) தீர்ப்புரைக் குழாங்கள்…
சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 771. Adjourn Sine Die கால வரையறையின்றி ஒத்திவைப்பு வேறு நாள் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு இலத்தீனில் sine என்னும் சொல்லிற்கு இன்றி என்றும் diē என்னும் சொல்லிற்கு நாள் என்றும் பொருள். சேர்த்து வரும் பொழுது நாளின்றி எனப் பொருள் தருகிறது. எனவே, நாளில்லாமல் – நாளைக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பது எனப் பொருளாகிறது. நீதிமன்றம், வழக்கினை மறு/வேறு நாள் குறிப்பிடாமல் – கால வரையறையின்றி மறு…
சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 761. Adequate Grounds போதுமான காரணங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள, நீக்க, வழக்கினை எடுத்துக் கொள்ள, வழக்கைத் தள்ளுபடி செய்ய, மேல் முறையீட்டை எடுத்துக்கொள்ளப் போதுமான தற்சார்பான காரணங்கள் இருத்தல். மாநில நீதிமன்றங்களில் இருந்து வரும் வழக்கை எடுத்துக் கொள்ள உச்ச நீதி மன்றம் தரப்பாட்டை வரையறுப்பதற்கான போதிய காரணங்கள். 762. Adequate Reasons To The Contrary மாறாகச் செய்வதற்குப் போதிய காரணங்கள் மாறாகப்…
சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 751. Address, Special தனிப் பேருரை ஒரு பொருண்மை குறித்துச் சிறப்பு அழைப்பாளரால் அல்லது சிறப்பு நிலையில் அளிக்கப்பெறும் சொற்பொழிவு. 752. Addressing Evidence ஆதாரங்களை அணுகுதல் ஒன்றை வெற்றிகரமாக முடிப்பதற்கு, அடிப்படை ஆதாரங்களைத் துணைக் கொள்ளல். 753. Addressing The Court நீதிமன்ற விளி சொல் நீதிமன்றத்தாரை விளிக்கும் மதிப்பிற்குரிய சொல்லாட்சி. வழக்கினை நீதி மன்றத்தில் எடுத்துரைக்கும் பாங்கு. 754. Adduce Evidence சான்று…
ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும்
(ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும் திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.30 ஊரும் பேரும் 43 அட்டானமும் அம்பலமும் துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம், அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு. வீரட்டானம் தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில…
திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
1 இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள…
கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf
28. குறுமி- dwarf ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf – குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், குள்ளமாக உள்ள மனிதர்களைக் குறிக்கும் சொல்லால் விண்பொருளையும் குள்ளன் என்று குறிப்பது பொருத்தமில்லை. குறு(56), குறுக்கை(2), குறுக(6), குறுகல்(7), குறுகல்வேண்டி(3), குறுகல்மின்(1), குறுகா(2), குறுகாது(3), குறுகார்(1),…
கலைச்சொல் தெளிவோம் 27 : முகிலம் – nebula
27. முகிலம் – nebula குறுங்கோள் வகைகளையும் நம்மிடம் பழங்காலந்தொட்டு நிலவும் சொற்களின் அடிப்படையில் பின்வருமாறு மீட்டுருவாக்கம் செய்வதே எளிமையாக உள்ளது. கார்பன் என்றால் கரியம், கரி, (வேளா.) கரிமம்( பொறி., சுற்., மீனி., மனை.) கார்பன் (சுற்.) எனக் கூறுகின்றனர். கரி(23) என்பதன் அடிப்படையில் கரியம் மிகுதியாக உள்ளது கரிமி எனலாம். இரும்பு(29) என்பதன்அடிப்படையில்இரும்பு மிகுதியாக உள்ளது இரும்பி எனலாம். மாழை மிகுதியாக உள்ளது மாழையம் வெண் (254), செம்(359), வெள்ளிடை(1) என்னும் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். வெண்மை நிறமானது வெண்மி…
கருவிகள் 1600 : 1 – 40 – இலக்குவனார் திருவள்ளுவன்
‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி – U-tube manometer ‘வளை ப’(U) வடிவக் குழாய் வளியழுத்தமானி > ‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி அகச்சிவப்பருகு படவரைவு கதிர்நிரல் மானி(அ. ப. க) – near-infrared mapping spectrometer (nims) அகச்சிவப்பு ஒளி முனைவுமானி (அ.சி.ஒ.மு.மா) – infrared photo-polarimeter (isophot) : வான்பொருள் வெளிப்படுத்தும் அகச்சிவப்புக் கதிரியத்தைக் கண்டறிய உதவும் கருவி. அகச்சிவப்பு நிறமாலைமானி – infrared spectrometer : வேதியல் கலவைகளின் செறிவை அகச்சிவப்புக் கதிரியத்தை அளப்பதன் மூலம் கண்டறியப்பயன்படும் கருவி. அகச்சிவப்பு…
கலைச்சொல் தெளிவோம் 23 : எக்கர் – Sand hill; sandy
23 எக்கர் – Sand hill; sandy மணற்குன்று எக்கர் என்பது பெருமணற்பரப்பை, மணற்குன்றைக் குறிக்கும் 54 பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவற்றில் சில : எக்கர் இட்ட மணலினும் பலவே (புறநானூறு: 43.23) நில வெக்கர்ப் பல பெயரத் (பொருநராற்றுப்படை: 213) தூஉஎக்கர்த் துயில் மடிந்து (பட்டினப்பாலை 117) படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர் (அகநானூறு 11.9) முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்(நற்றிணை 15.11) sandy-மணல்மிகு எனப் பொறிநுட்பவியலிலும் மணல் கொண்ட எனக் கால்நடை அறிவியலிலும் பயன்படுத்துகின்றனர். அதைவிட எக்கர்…
கலைச்சொல் தெளிவோம் 20: அடுமகள் -female cook; அடுமகன் -male cook
20:அடுமகள் -female cook ; அடுமகன் -male cook அடு என்பதன் அடிப்படையில் சமையல் செய்யும் பெண் அடுமகள் எனப்படுகின்றாள். அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் – புறநானூறு399.1 நாம் இப்பொழுது female cook—சமைப்பவள்/பெண்சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகள் என்றே குறிக்கலாம். male cook-சமைப்பவன், ஆண் சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகன் என்றே குறிக்கலாம். அடுமகள் -female cook அடுமகன் -male cook – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 8.] மலையியல் கலைச் சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
8.] மலையியல் கலைச் சொற்கள் மலை தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், மலையியல் என்பன போன்று குறிஞ்சியியல் என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும். சங்கச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையோ பிறமொழிச்சொற்களையோ நாம் காண இயலாது. சான்றாக எதிரரொலிக்கும மலையைச் சிலம்பு என்றனர். ஆனால், அத்தகைய வகைப்பாடு பிற மொழியாளரிடம் இல்லாததால் நாம் பொருள் விளக்கம்தான் அளிக்க இயலும். பின்வரும் சொல்…
