எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்

(௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? இன்று தமிழரிடையே நிலவும் பண்பாடு, கலவைப் பண்பாடே; தூய தமிழ்ப்பண்பாடன்று! பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் அழிந்தோ – அழிக்கப்பட்டோ விட்டன. இன்றைய இலக்கியங்களில் முழுக்க முழுக்க ஆரியப் பண்பாடு அல்லது அயல் பண்பாடு இழையோடியுள்ளது! தமிழ்ப்பண்பாட்டின் சாயை ஆங்காங்கு காணப்படுகின்றது. அதனை நுணுகி ஆராய்ந்து – கண்டு வெளிப்படுத்துவதே அறிவு சான்ற தமிழ்ப் பேரறிஞர்தம் தலையாய கடனாம். அதுவே அவர், தமிழுக்கும்…

௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார்

(ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௬. புலமையார்: அன்றும் இன்றும் ‘புலம்’ என்றால், ‘அறிவு’ எனப்பொருள். அது பல்துறை அறிவையும் குறிக்கும். ஆனால் ஈண்டு யாம் எடுத்துக் கொண்டது தமிழ்ப் புலமை பற்றியதேயாம்.பண்டு தமிழ்ப் புலமை தமிழறிவைப் பெருக்கிக் கொள்வதற்கென்றே பெறப்பட்டது. பிறமொழிக் கலப்பே தமிழில் உண்டாகாத காலம் அது. தமிழ்ப் புலமையாளரும் அன்று மிகக் குறைவு. இன்று போல் அச்சிட்ட நூல்கள் அன்று இல்லை. எழுத்தாணியால் ஓலையில் எழுதப்பட்ட சுவடிகளே இருந்தன. ஓர்…

ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார்

(௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? – திருத்துறைக்கிழார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் ‘தமிழில் என்ன இருக்கிறது?’ – இந்த வினா தந்தை பெரியாரவர்களால் எழுப்பப்பட்டது.  அது மட்டுமா?  தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்பதும் அவரது கூற்றாகும் “இவற்றைச் சொன்னதன் உட்பொருள் யாது?” என்பதே ஈண்டு ஆராயற்பாலது.  பெரியாரவர்கள், தமிழின் மீதுள்ள வெறுப்பினால் இவ்வாறு கூறினார்களா? என்றால் இல்லை! இன்றுள்ள தமிழ்நூல்கள் யாவும் – திருக்குறள் உட்பட – மக்கள் பின்பற்றவேண்டிய அறநெறிகளையும், வாழ்க்கை முறைகளையும், போர்…