(வெருளி நோய்கள் 694-698: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 699-703 699. கழித்தல் வெருளி – Subtractionphobia கழித்தல் குறித்த வரம்பற்ற பேரச்சம் கழித்தல் வெருளி. கணக்கு வெருளி உள்ளவர்களுக்குக் கழித்தல் வெருளியும் வருகிறது. கடன்வாங்கிக் கழித்தல் முதலான கணக்கு புரியாமல் கழித்தல் கண்டு அஞ்சுகின்றனர். எனவே, கழித்தல் என்றாலே தேவையற்ற காரணமற்ற அளவுகடந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர். 00  700. கழிவறை வெருளி –  Toualetaphobia   கழிவறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கழிவறை வெருளி. தூய்மையின்மை, நாற்றம், நோய்த்தொற்று குறித்த கவலை போன்றவற்றால் கழிவறைபற்றிய அளவுகடந்த தேவையற்ற…