வெருளி நோய்கள் 704 -708 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 699-703: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 704 -708 704. கழுதை வெருளி-Gaidouriphobia கழுதை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதை வெருளி. கழுதை உதைத்து வீழ்த்தி விடும் என்று தேவையின்றிப் பேரச்சம் கொள்கின்றனர். Gaidouri என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கழுதை. 00 705. கழுதைக் குரங்கன் வெருளி – Donkeykongphobia காணாட்டங்களில் இடம்பெறும் புனைவுரு கழுதையான கழுதைக் குரங்கன் (Donkeykong) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதைக் குரங்கன் வெருளி. 00 706. கழுதைப்புலி வெருளி – Yainaphobia கழுதைப்புலிபற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம்…
