பேரின்பம் நல்குமாம் தாய்மொழி – கவிக்கோ ஞானச்செல்வன்

  தாய்மொழி என்பது சிந்தனைக்கோ ஊற்றுக்கண் சீர்மைக்கோ நாற்றங்கால் வந்தனைக்கோ சீர்தெய்வம் வாழ்க்கைக்கோ உயிர்நாடி முந்திவரும் நல்லறிவு மூளுகின்ற மெய்யுணர்வு வந்துலவும் பூந்தென்றல் வழிகாட்டும் ஒளிவிளக்கு தாய்மொழி என்பது தாய்முலைப் பாலதாம் ஊட்டம்மிகத் தருவதாம் உரமூட்டும் வரமதாம் வலிமையைச் சேர்ப்பதாம் வல்லமை வளர்ப்பதாம் பிணியெலாம் அகற்றுமாம் பேரின்பம் நல்குமாம் நந்தமிழ் வண்டமிழ் செந்தமிழ் பைந்தமிழ் இன்தமிழ் பொன்தமிழ் சொற்றமிழ் நற்றமிழ் சுகத்தமிழ் அகத்தமிழ் சங்கத்தமிழ் தங்கத்தமிழ் பொங்குதமிழ் தங்குதமிழ் கன்னல்தமிழ் கட்டித்தமிழ்! – கவிக்கோ ஞானச்செல்வன்

காதல் ஒரு விந்தை!

– கவிக்கோ ஞானச்செல்வன் திங்களை வென்ற ஒளிமுகத்தாள்-நறும் தேன்சுவை தோற்கும் மொழியுடையாள் கொங்கலர் மேவும் கூந்தலினாள்-எழில் கொட்டும் திருவென உருவுடையாள்! கங்கு கரையறு அன்பையெல்லாம்-விழி காட்டும் எனத்தகும் கண்ணுடையாள்! பொங்கி வரும்பெரு நிலவிடையே-உயிர் போன்றதன் காதலன் தனைக்காண்பாள்! ஆயிரம் கனவுகள் கண்டதுண்டு-புவி ஆளும் அடலுறு தலைவனுண்டு ஆயிழை குரிசில் கரம்கோத்து-தினம் ஆடிப் பாடிக் களித்ததுண்டு பாய்மரக் கப்பல் இல்லறமாம்-மிகப் பரந்த பெருங்கடல் வாழ்கையதாம் சேயிழை தென்னஞ் சோலையென-வளம் செழிக்கும் நல்லறம் எண்ணிடுவாள்! பாதச் சிலம்புகள் அமைதிபெற-இளம் பாவை ஓரிடம் தனிலமர்ந்து காதலன் வரவை மனத்தெண்ணி…