மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

(மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று 1/5 தொடர்ச்சி)   மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5    கற்பனைக்கும்    எட்டாத   அற்பு   தங்கள் கரத்திருக்கும்   பேசியிலே   செய்யும்   நாமோ நற்காலம்   காட்டுகின்ற   கடிகா   ரத்தை நாள்காட்டி   கணக்கியினை   துறந்து  விட்டோம் பற்றியெங்கும்    எடுத்துசென்று   செய்தி   யோடு பாடல்கேட்ட   வானொலியைத்   தொலைத்து  விட்டோம் நற்றமிழில்   நலம்கேட்டு   எழுதி   வந்த நற்கடிதப்   பழக்கத்தை   விட்டு  விட்டோம் ! பக்கத்தில்   பெற்றோர்கள்   அமர்ந்தி   ருக்கப் பக்கத்தில்   உடன்பிறந்தோர்   அமர்ந்தி   ருக்கப் பக்கத்தில்   சுற்றத்தார்   அமர்ந்தி   ருக்கப் பக்கத்தில்  …

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 1/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று ! 1/5  தொலைபேசி  வருமுன்பு  நெஞ்சி   ருக்கும் தொலைதூர   உறவோடு   தொடர்பு  கொள்ள மலைகடந்து   பறக்கின்ற   புறாவின்   காலில் மனக்கருத்தைக்   கட்டியன்று   அனுப்பி  வைத்தார் அலைகடலைக்   கடந்தின்று   இருப்போ  ரோடே அறிவியலால்   மின்னஞ்சல்   முகநூல்   தம்மில் வலைத்தளத்தில்   கட்செவியில்   கையால்   தட்டி வார்த்தையாக்கிக்   கண்களிலே   பேசு   கின்றார் ! எத்தனைதான்   முன்னேற்றம்   வந்த  போதும் எழில்கிராமப்   பச்சைவயல்   அழகைப்   போல சித்தத்தை   மயக்குகின்ற   சேலை  தன்னில் சிரிக்கின்ற   அத்தைமகள்   முகத்தைப்  போல முத்தான  கையெழுத்தில்   அன்பைக்   கொட்டி முழுநெஞ்ச  …

பாரதி கலைக்கழகத்தின் இலக்கியச்சங்கமம்

கவிமாமணி புதுவயல் ந.செல்லப்பன் 90ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் ஆவணி 12. 2047 / ஆகத்து 28, 2016 காலை 9.00 திருவள்ளுவர் இலக்கிய மன்றம் ஆதம்பாக்கம் திருக்குறள் அறத்துப்பால் முற்றோதல் உரையரங்கம் கவியரங்கம் முனைவர் கோ.மோகனராசு முனைவர்  குமரிச்செழியன்    

ஒய்.சி.சந்தோசம் முத்து விழா, சென்னை 600 004

ஆடி 31, 2047 / ஆக. 15, 2016 முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை தூய பீட்சு பள்ளி வளாகம், மயிலாப்பூர், சென்னை – 4 கவியரங்கம் இசையரங்கம் விருந்தரங்கம் பட்டிமன்றம் வாழ்த்தரங்கம் விருதரங்கம்

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்: இலக்கிய நிகழ்ச்சி

ஆடி 23, 2047 / ஆக. 07, 2016 பிற்பகல் 3.00 த.மகாராசன் முனைவர் குமரிச்செழியன் ஆலந்தூர் செல்வராசன் சா.கோவிந்தராசன்

இமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன்

தில்லித்தமிழ்ச்சங்கத்தில்  கவியரங்கம் நாள் – ஆடி 02, 2047  / 17-07 -2016   இடம் – தில்லித்  தமிழ்ச்சங்கம் தலைப்பு – இமயம் முதல்  குமரி  வரை தலைமை – கவிஞர்  காவிரிநாடன் பாடும் கவிஞர் :   கருமலைத்தமிழாழன் தமிழ் வணக்கம் முத்தமிழே !    ஞாலத்தில்   முந்தி   வந்தே  கன்னியென   இலங்கு   கின்றாய் தித்திக்கும்    அமுதமெனச்   சுவையாய்   நாவில் திகழ்கின்றாய் !   முச்சங்கப்    புலவ   ராலே எத்திக்கும்   புகழ்மணக்கும்   ஏற்றம்   பெற்றாய் ! எழுந்துவந்தே   கடற்கோள்கள்    அழித்த   போதும் வித்தாக    முளைத்துநின்றாய் ! …

அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! – கருமலைத்தமிழாழன்

அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! [தொல்காப்பியர்  சிலை  திறப்பு  விழா கவியரங்கம் இடம் –  காப்பிக்காடு (நாகர்கோவில்)   நாள்: 26.06.2047 10-07 -2016 தலைமை –  கவிஞர் குமரிச்செழியன்]   தமிழ்த்தாய்  வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்             களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்             இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும்             காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும்             வீழாத   தமிழன்னையை  …

‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்

‘இலக்கியச் சோலை’ மாத இதழ் சார்பில் தந்தையர்நாள் நிகழ்ச்சி வைகாசி 30, 2047 / 12-06-2016 அன்று காலை, சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கிறது.   ‘அப்பா –  அப்பப்பா’ தலைப்பில் கவியரங்கம்.   நீங்களும் பங்கேற்கலாம். பெயர் பதிவுக்குத் தொடர்பு கொள்க:  98405 27782.

தமிழ் இலக்கியமன்றம், புழுதிவாக்கம் – கவியரங்கமும் கருத்தரங்கமும்

   வைகாசி 09, 2047 / மே 22,2016 கருத்தரங்கத் தலைமை : கவிஞர் அமரசிகாமணி கருத்தரங்கச்சிறப்புரை : கவிமாமணி குடந்தையான் அனைவரும் வருக! – த.மகாராசன்

மூவமைப்புகளின் முப்பெருவிழா, வனக்குடில் கண்ணாடி மாளிகை (கள்ளக்குறிச்சி)

  கல்வராயன் மலைத்தொடர் வெள்ளிமலை  சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 21,2016 காலை 10-00 முதல் சித்திரை முழுநிலவு 7-00 மணி வரை. முதல் நிகழ்ச்சி : பாவேந்தர்- பட்டிமன்றம். நடுவர்: முனைவர் நா.இளங்கோ. தியாகதுருகம் தமிழ்ச்சங்கம் சங்கைத்தமிழ்ச்சங்கம்(சங்கராபுரம்) குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம்(புதுச்சேரி) நண்பர்கள் தோட்டம்

இலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.00 கவியரங்கம் : தலைமை : திருமதி இராணி பிரகாசு நூலாய்வு : தே.ந.கந்தசாமியின் புரியாத புதிர் – திருமதி இளங்கனி