மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்
மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார் மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார் தமிழக உழைக்கும் மக்களின் பெருங்கவிஞர் இன்குலாபு இன்று கார்த்திகை16,2047/1.12.2016) இயற்கையோடு கலந்தார். உடல்நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நோயிலிருந்து மீளாமல் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்குலாபு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். குமுகாயச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. …
புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்
புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார்! விடுதலைப் போராளி, உலகை ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த மாவீரன், 638 தடவை அமெரிக்க எமனிடமிருந்து மீண்டவன், ஒடுக்கப்பட்டவர்களின் குரலோன், நாட்டில் கல்லாமையை ஒழித்த செயற்பாட்டாளன், பரப்பளவில் சிறியதான கியூபாக் குடியரசு அல்லது கூபாக்குடியரசு நாட்டைப் பெரிய நாடுகளுக்கு இணையாக மாற்றிய தலைவன், இவ்வாறான பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர் புரட்சித்திலகம் பிடல் காசுட்டிரோ (Fidel Alejandro Castro Ruz : ஆடி 28, தி.பி. 1957 / ஆகத்து 13, 1926 – கார்த்திகை…
பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் கௌதமன் காலமானார்
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா(துரை) அவர்களின் வளர்ப்பு மகன் கா.ந.அ. கௌதமன் சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 67. இவரது மனைவி துளசி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சென்னை செனாய் நகரில் உள்ள மகள் சரிதா வீட்டில் கௌதமன் வசித்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில், இன்று 29.12.13 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கௌதமன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். செனாய் நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கௌதமன் உடலுக்குத்…
