வெருளி நோய்கள் 771-775: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 766-770: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 771-775 காளான்பற்றிய அளவுகடந்த பேரச்சம் காளான் வெருளி.காளாம்பி என்றும் காளானைக் குறிப்பர். எனவே, முதலில் காளாம்பி வெருளி என்றும் குறித்திருந்தேன். எனினும் இரு வகை வேண்டா என்பதால் இப்பொழுது காளான் வெருளி என்று மட்டும் குறித்துள்ளேன்.myco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காளான்.00 காற்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் காற்பந்தாட்ட வெருளி. அமெரிக்கா, கனடா, ஆத்தரேலிய நாடுகளில் காற்பந்தை(foot ball) உதைபந்து(soccer ball) என்பதால் உதைபந்தாட்ட வெருளி என்றும் சொல்லப் பெறும்.காற்பந்தாட்டத்தினால் உடலுக்கோ உயிருக்கோ சேதமோ…
