கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 82 : பூங்கொடி இசைவு தருதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 81 : தமிழைப் பழிக்க விடுவதோ!-தொடர்ச்சி) பூங்கொடி எழிலிபாற் பயின்ற காதை பூங்கொடி இசைவு தருதல் `அன்னையிற் சால அன்புளம் காட்டி என்புலம் ஓம்பி இலங்கிட அருளினை! 95 நின்பணி அஃதேல் நேருதல் அன்றி மறுமொழி கூற யானோ வல்லேன்? மறையுமென் வாழ்வு வளர்தமிழ்ப் பணிக்கே என்றுளம் கொண்டேன் என்பணிக் கஃதும் நன்றெனின் இன்னே நவிலுதி தாயே’ 100 காவியப் பாவை என்றலும், எழிலி யாப்பின் இயலும் பாவும் வகையும் பாவின்…
செந்தமிழ்த் தாயே!- கவிஞர் முடியரசன்
செந்தமிழ்த் தாயே! எடுப்பு எங்கள் தமிழ் மொழியே! – உயிரே! -எங்கள் தொடுப்பு இங்குனை நாங்கள் இகழ்ந்தத னாலேஇழிநிலை அடைந்தோம் உரிமையும் இழந்தோம் -எங்கள் முடிப்பு பூமியில் மானிடர் தோன்றிய நாளேபூத்தனை தாமரைப் பூவினைப் போலேபாமிகும் காவியப் பாவையே தாயேபணிந்தோம் கடைக்கண் பார்த்தருள் வாயே. -எங்கள் இயலிசை கூத்தென இலங்கிடு வாயேஎமதுயிர் உணர்வுகள் யாவையும் நீயேமயலெமை நீங்கிட மதியருள் வாயேமைந்தரைக் காத்தருள் செந்தமிழ்த் தாயே. -எங்கள் – கவிஞர் முடியரசன்
