(வெருளி நோய்கள் 786-790: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 791-795 கிழக்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கிழக்கு வெருளி/ கீழ்த்திசைச் செலவு வெருளி. கிழக்கே பயணம் செய்தால், கிழக்குத் திசையில் எதையும் செய்தால் தீமை நிகழும் என்ற பேரச்சம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில நாள், சில கோள்களின் ஆற்றல் குறைந்திருக்கும். அந்த நாளில் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்பது கணிய/சோதிடப் பித்தர்களின் நம்பிக்கை. இந்தியாவில் கணிய(சோதிட)ப் பற்றர்கள், திங்கட் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் கிழக்குத் திசையில் பயணம் செய்ய மாட்டார்கள். இதனைக்  ‘கிழக்கே…