நம்பிக்கையுடன் எழு! :  கி.பி. அரவிந்தன்

நம்பிக்கையுடன் எழு! மலைகளில் உரமாய்த்தேநீரில் இரத்தமாய்முகமற்றுப் போனோரேகவனித்தீர்களா? பனிப் படலங்களைஊடுருவும்எக்காள ஒலிகள்.சிங்கத்தின் வாள்இனிஉடைபடக்கூடும். அதோ.வயல்வெளி எங்கும்தலை நிமிரும் நெற்பயிர்கள்.வசந்தன் கூத்தின்நாயகர்கள் ஆட்டம்.இவனோ நண்பன். பனைகள் மறைக்கும்செம்மண் பரப்பு.பனங்காட்டுச் சலசலப்பு.ஓலைகள் உராய்வினில்அக்கினிக் குஞ்சுகள். அவற்றுக்கும் அப்பால்அலைகளின் சீற்றம்,முரல்களின் துள்ளல்.அம்பாப் பாடல்களில்சோகம் தொலைக்கும்ஏலேலோப் பாடகர்கள். நண்பர்கள் . . .தோழர்கள். . . “ஆறுகள் முன்னோக்கியேபாய்கின்றன”அப்புறமென்ன!அடர்ந்த மலைகளின்இருட்டினில் இருந்துதேநீர் கரங்களில்விலங்குகள் கழற்று.பனி மலைகளின்உச்சிகள் பிளந்துகலவியைத் தொடங்கு,சக்தியை உமிழ்,உழுத்த மாளிகையின்இடுக்குகள் எங்கணும்ஆலம்விதைகள். நம்பிக்கையுடன்எழு. . . . -கி.பி. அரவிந்தன்

கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 முடிவுகள்

காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050)  முடிவுகள் முதலாவது பரிசு :  ‘பொறி’  : த. இராசராசேசுவரி (குப்பிழான் -இலங்கை) – 10000 உரூ.  சான்றிதழ்.  இரண்டாவது பரிசு :  ‘மறந்திட்டமா” : வி. நிசாந்தன் (இலங்கை) – 7500 உரூ.  சான்றிதழ்.  மூன்றாவது பரிசு : ‘புலம்பெயர் பறவைகள்’ : கேசாயினி எட்மண்டு  (மட்டக்களப்பு – இலங்கை) – 5000 உரூ.  சான்றிதழ்.    நடுவர் பரிசு…

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017’

‘காக்கைச் சிறகினிலே‘ மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017 / தி.பி.2048′ –    ‘காக்கைச் சிறகினிலே’ இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.  பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. புலம்பெயர் இலக்கியப்…

கைவிட முடியாத கனவு! – பா.செயப்பிரகாசம்

  தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது. விடுதலையைக் காதலித்த எண்ணிக்கையற்ற போராளிகள் அதற்காக மடிந்தார்கள். எந்தக் கனவினைச் சுமந்து போராளிகள் இறக்கிவைக்காமல் நடந்தனரோ, அந்தக் கனவின் மீதி இன்னும் இருக்கிறது. புதைக்கப்படுவது என்பதினும் விதைக்கப்படுவோராய் போராளிகள் ஆகியிருந்தனர். ஈழப்பகுதியெங்கும் நிறைந் திருந்தன மாவீரர் துயிலுமில்லங்கள். இலங்கை இராணுவத்தால் இன்று சிதைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றன- எங்கே எமது கனவின் மீதி? ஒரு வித்து நல்வித்து எனத் தெரிகிறது. நல்வித்தை…

‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047

 ‘காக்கைச் சிறகினிலே’ மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047   வணக்கம்!   நான் முகிலன் என்ற முகுந்தன். மறைந்த கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களுடைய நாற்பதாண்டு நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.   பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத்…