(வெருளி நோய்கள் 816-820: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 821-825 குட்டையர் பற்றிய காரணமற்ற பேரச்சம் குட்டையர் வெருளி.“கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே” என்பது பழமொழி. குள்ள உருவத்தில் வாமனனாகத் தோற்றம் எடுத்து சேர மன்னனையே(மகாபலி) ஏமாற்றியவன் திருமால். எனவேதான் கள்ளத்தனம் செய்வோரை நம்பினாலும் குள்ளனை நம்பாதே எனப் பழமொழி வந்தது. ஆனால் இக்கதையைப் புரிந்து கொள்ளாமல் குட்டையாக இருப்பவர்கள்பற்றி அஞ்சுவோர் உள்ளனர்.00 தங்களைக் கவர்ச்சியாளர்களாக எண்ணிக்கொண்டுள்ள உண்மையில் பருத்த தோற்றம் உடைய அழகற்ற பெண்களைக் கண்டால் வரும் தேவையற்ற பேரச்சம் குண்டுப்பெண் வெருளி.குண்டுப் பெண்களில்…