வெருளி நோய்கள் 836-840: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 831-835: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 836-840 குமளிப் பழம் / சீமை இலந்தம் பழம் (Apple) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் குமளி வெருளி.ஆப்பிள் பழம் என்பது பொதுவாகச் சீமை இலந்தை என அழைக்கப் பெறுகிறது. அரத்த(இரத்த) நிறத்தில் இருப்பதால் அரத்தி என்கின்றனர் சிலர். ஆனால் செவ்வல்லியின் பெயர் அரத்தி. எனவே, இதற்குப் பொருந்தாது. ‘உன்னாம்’ என்றும் ‘குமளி’ என்றும் அகராதிகளில் உள்ளன. பயன்பாட்டுவிவரம் தெரியவில்லை. ஓர் அகராதியில் குறிப்பிடப்படும் சொல் வேறு அகராதிகளில் இருப்பதில்லை. ஏதேனும் ஒரு சொல்லை நாம்…
