குறள் கடலில் சில துளிகள் 17. பெருமிதத்துடன் வாழ்க! – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் – 16. அறிவை உடைமையாக்குக!-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 17.செருக்கும் சினமும் சிறுமையும் நீக்கிப் பெருமிதத்துடன் வாழ்க! செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 431) அடுத்து வரும் குற்றங்கடிதல் முதலான ஆறு அதிகாரங்களையும் பேரா.சி.இலக்குவனார் ‘தள்ளற்பாலன சாற்றும் இயல்’ என்கிறார். இவற்றை நம் வாழ்விலிருந்து தள்ளிவிடுவதன் மூலம் நல்வாழ்வைக் கொள்ளலாம். செருக்கும் வெகுளியும் கீழ்மைப் பண்பும் இல்லாதவர் உயர்வு மேம்பாடானது என்கிறார் திருவள்ளுவர். தலைக்கனம், சினம், கீழ்மை முதலானவற்றில்…

குறள் கடலில் சில துளிகள் – 16. அறிவை உடைமையாக்குக! : இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் : 15. வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்திடு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 16. அறிவை உடைமையாக்கி எல்லாம் உடையவனாகத் திகழ்க! அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 430) அறிவுடையார் எல்லா நலன்களும் உடையவர்; அறிவில்லாதவர் வேறு எச்செல்வம் பெற்றிருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவார் என்கிறார் திருவள்ளுவர். உடையர்=உடைமையாகக் கொண்டவர். அறிவு மாணிக்கங்களை விட மிகுதியும் மதிப்பானது. நீங்கள் விரும்பும் எதனுடனும் அதை ஒப்பிட முடியாது(Wisdom is…

குறள் கடலில் சில துளிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்: 15. வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்திடு!

(குறள் கடலில் சில துளிகள் 14. அஞ்சவேண்டியதற்குஅஞ்சுவதேஅஞ்சாமையாகும்! –தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 15. வந்தபின் காப்பதை விட வருமுன் காத்திடு! எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 429) எதிர் வருவதை முன்பே எதிர்நோக்கி – அறிந்து காக்க வல்ல அறிவு உடையவர்க்கு அவர் நடுங்கும் படி வரக்கூடிய துன்பம் இல்லை என்கிறார் திருவள்ளுவர். நடக்க இருப்பதை முன்கூட்டி உணர்பவர்கள் துன்பத்தைத் தடுப்பர் (Those who foresee the outcome will avoid suffering)…

குறள் கடலில் சில துளிகள் 14. அஞ்சவேண்டியதற்குஅஞ்சுவதேஅஞ்சாமையாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 14. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதே அஞ்சாமையாகும்! அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 428) அஞ்சத்தக்கவற்றிற்கு அஞ்சாதிருத்தல் அறியாமை; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடையார் இயல்பு என்கிறார் திருவள்ளுவர். அஞ்சாமை உடையவர்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பதில்லை(Fearless people are not afraid to be afraid) என்கின்றனர் மனஅறிவியல் அறிஞர்கள். அஃதாவது அஞ்சவேண்டிய…

குறள் கடலில் சில துளிகள் 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 12. உலகத்தார்வழியில்செல்வதேஅறிவு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள், 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 427) அறிவுடையார் எதிர்கால நிகழ்வை அறியக்கூடியவர். அறிவில்லாதவர் அறியும் திறன் இல்லாதவர் என்கிறார் திருவள்ளுவர். அறிகல்லாதவர்=அறிவதைக் கல்லாதவர்கள் = அறியமாட்டாதவர் அல்லது அறியமுடியாதவர்கள். அறிக + கல்லாதவர் =(அறிக என்பதன் ஈற்று எழுத்தான க மறைந்து) அறிகல்லாதவர் என்றும் சொல்லலாம். “கண்ணுக்கு முன்னால்…

குறள் கடலில் சில துளிகள் 12. உலகத்தார்வழியில்செல்வதேஅறிவு! – இலக்குவனார்திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 11. உலகம்தழுவியதேஅறிவு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 12. உலகத்தார் வழியில் செல்வதே அறிவு! எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 426) உலகம் எவ்வாறு இயங்குகிறதோ அவ்வழியில் இயங்குவதே அறிவு என்கிறார் திருவள்ளுவர். ஆள்வோர்கள் உலகம் தழுவிச் செல்லும் அறிவை இழப்பதாலேயே போர்கள் உண்டாகின்றன என வரலாற்றிஞர்கள் கூறுகின்றனர். பரிமேலழகர், ‘உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,’ எனக் கருதித்தான் நினைத்தவாறே ஒழுகின்,…

குறள் கடலில் சில துளிகள் 11. உலகம்தழுவியதேஅறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 11. உலகம் தழுவியதே அறிவு! உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 425) உலகத்தைத் தழுவிச் செல்லுதல் அறிவு. இன்பத்திற்கு மகிழ்தலும் துன்பத்திற்கு வருந்தலும் அறிவாகா என்கிறார் திருவள்ளுவர். துன்பத்திலிருந்து அறிவு வரும். ஆனால், அறிவு துன்பமோ இன்பமோ தராது என்கின்றனர் கல்வியியலறிஞர்கள். தழீஇயது என்பது  உலகத்தாரைத் தழுவிச் செல்லுதல் –…

குறள் கடலில் சில துளிகள் 10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 9. யாரிடம் கேட்டாலும் மெய்ப்பொருள் காண்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்! எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 424) அரிய பொருளையும் பிறர் புரிந்து கொள்ளுமாறு எளிதாக உணர்த்திப், பிறர் கூறும் நுண்ணிய பொருள்களையும்  எளிதாக உணர்ந்து கொள்வதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர். எதையும் புரியுமாறு சொல்லலும் எதையும் புரிந்து கொள்ளுமாறு கேட்டலுமே அறிவு என்று…

குறள் கடலில் சில துளிகள் 9. யாரிடம் கேட்டாலும் மெய்ப்பொருள் காண்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 8. மனத்தை நல்வழி செலுத்துவதே அறிவு  – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 9. யாரிடம் கேட்டாலும் மெய்ப்பொருள் காண்க! எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 423) எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மையான இயல்பை காண்பதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர். அறிவுப்புலன் குறித்து ஆராயும் அறிவியலறிஞர்கள், அறிதலின் ஆழ்ந்தநிலையே (the deepest level of knowing) – அஃதாவது உண்மைத்தன்மையை…

குறள் கடலில் சில துளிகள் 8. மனத்தை நல்வழி செலுத்துவதே அறிவு  – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 7 . பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக்கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 8. மனத்தை நல்வழி செலுத்துவதே அறிவு சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 422) மனத்தைச் சென்றவிடங்களில் எல்லாம் செல்லவிடாமல், தீமையிலிருந்து நீக்கி, நல்லன பக்கம் செல்ல விடுவதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர். “அறிவுவழியில் செல்வதே வலிமைக்கு வழி” என்கின்றனர் கல்வியியலர்கள். ஒரீஇ=நீக்கி; உய்ப்பது=செலுத்துவது;  எனப் பொருள்கள். செலவிடாது…

குறள் கடலில் சில துளிகள் 7 . பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக்கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? ….தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 7. பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக் கொள்க! அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 421) அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி. அதுவே பகைவராலும் அழிக்கமுடியாத அரணுமாம் என்கிறார் திருவள்ளுவர். அறிவு யாரிடம் இருக்கின்றதோ அதுவே அவர்களைக் காக்கும் கருவி என மேனாட்டுக் கல்வி அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கல்வி…