(வெருளி நோய்கள் 861-865: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 866-870 உறுப்பு அளவுகள் இயல்பிற்கு மாறாகக் குறைந்துள்ள குறளன்/குறளி(midgets) தொடர்பான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் குறளன் வெருளி.குள்ளவாதம், குறுநிலை என்று இதனை அழைக்கின்றனர். பொதுவாக அகவை வந்தும் 147 சிறுகோல்/செ.மீ. அளவிற்குக் குறைவானவர்களே இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். இவர்களுள் சிலர் சற்று உயரமாக இருந்தாலும் கை, கால் உறுப்புகள் வழக்கத்திற்கு மாறாகக் குறு நிலையிலேயே இருக்கும்.00 குறிகை குறித்த வரம்பற்ற பேரச்சம் குறிகை வெருளி.அடையாளமாகக் காட்டப்பெறும் குறிகை தவறாக இருக்குமோ அதனால் தீய விளைவுகள் வருமோ என்ற…