(வெருளி நோய்கள் 876-880: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 881-885 குறை வுணா (junk food) மீதான மிகையான பேரச்சம் குறை வுணா வெருளி.குறை வுணா என்றால் குறைந்த அளவு உணவு என்று கருதாமல் குறைந்த அளவு ஊட்டமுள்ள சிற்றுணா எனக் கொள்ள வேண்டும்.junk, cibus ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு முறையே சிறுமை, உணவு எனப் பொருள்.00 தாளில் எழுதத் தொடங்கி அல்லது வரையத் தொடங்கி முற்றுப்பெறாமல் அரைகுறையாக விடப்படும் குறைபடைப்புத் தாள் குறித்த அளவு கடந்த பேரச்சம் குறை தாள் வெருளி.தாள் வெருளியிலும் வெற்றுத்தாள்…