(வெருளி நோய்கள் 871-875) வெருளி நோய்கள் 876-880 குறுந் தகடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறுந் தகட்டு வெருளி.ஒலி. ஒளி அலைப்பதிவுகள் சரியாக மேற்கொள்ளப் படவில்லையோ, கீறல் விழுந்த குறுந்தகடாக இருந்து சரியாக இசையையோ உரையையோ கேட்க முடியாமல் போகுமோ, கேட்கத்தகாதவை அல்லது பார்க்கத்தகாதவை பதிவாிகியருக்குமோ என்ற பேரச்சத்திற்கு ஆளா்வோர் உள்ளனர்.00 குறுமி(dwarf planet) குறித்த வரம்பற்ற பேரச்சம் குறுமிவெருளி.dwarf planet என்றால் குள்ளன் என்கிறார்கள். அவ்வாறு சொல்வது உயர்திணையாகும். குறுமளவு உள்ள கோளைச் சுருக்கமாகக் குறுமி என்பது பொருத்தமாக இருக்கும்.Ceres என்னும் இலத்தீன்…