(வெருளி நோய்கள் 906-910 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 911-915 கை விளக்கு(torch light) குறித்த வரம்பற்ற பேரச்சம் கை விளக்கு வெருளி.தீவட்டி விளக்கு, தீப்பந்தம், கைப்பந்த மின்விளக்கு முதலானவற்றை குறிக்கிறது. இந்த இடத்தில் கைப்பந்த மின்விளக்கு என்பது சுருக்கமாகக் கைவிளக்கு எனக் குறிக்கப் பெற்றுள்ளது.Pyrso என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தீ. ஒளிப்பிழம்பு, சுடரொளி என்னும் பொருள்களையும் குறிக்கிறது. இங்கே ஒளிச்சுடர் தரும் கை விளக்கையும் குறிக்கிறது.00 கை மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கை வெருளி.தம் கைகளைக் கண்டாலோ அடுத்தவர் கைகளைக் கண்டாலோ…