(வெருளி நோய்கள் 926-930 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 931-935 931. கொண்டாட்ட வெருளி – Heortophobia கொண்டாட்டம் குறித்த வரம்பு கடந்த பேரச்சம் கொண்டாட்ட வெருளி Heorto என்னும் சொல்லின் மூலக் கிரேக்கச்சொல்லின் பொருள் விடுமுறை. விடுமுறை நாள் கொண்டாட்ட ங்களை இங்கேகுறிக்கிறது. 00 932. கொதிசாறு வெருளி – Soupaphobia கொதிசாறு(Soup) குறித்த அளவற்ற பேரச்சம் கொதிசாறு வெருளி. காய்கனிகளிலிருந்து அல்லது தக்காளி, முருங்கைக்காய் போன்ற குறிப்பிட்ட காய்கனியிலிருந்து அல்லது எலும்பிலிருந்து அல்லது பிற உண்பொருளிலிருந்து உருவாக்கப்படும் அனைத்துவகை கொதி சாறு அல்லது…