‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம் – மயிலாடுதுறை

  நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி பாசன படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் ‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம். நாள்: ஆடி 8, 2045 – 24.07.2014 வியாழன் மாலை 5 மணி இடம்: விசயா திரையரங்கு அருகில், மயிலாடுதுறை.   கருத்துரை: தோழர் கொளத்தூர் மணி அவர்கள், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

ப.அ.வைத்தியலிங்கம் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அழகியநாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடை பெற்றது.   தஞ்சை மாவட்ட சேதுபாவாசத்திர ஒன்றிய திராவிடர் விடுதலைக்கழக தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அழகியநாயகிபுரம் தோழர் ப.அ.வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழாஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை அழகியநாயகிபுரத்தில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக்கழக, சேதுபாவாசத்திர ஒன்றியச் செயவலர் சீனிகண்ணன் வரவேற்புரையாற்றினார். அறிவுலக ஆசான் தந்தை…