கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்
( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்- -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை கோமகன் நிகழ்ந்தன கூறல் இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன் வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென 135 வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட் பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம், தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக் கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம் 140 மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம், மெல்லியல் அல்லியை…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்
( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா? -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை வஞ்சியின் வஞ்சினம் பிணைவிழி மாதின் பெறலரும் இளமை அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன்; இவள்நலம் விழையும் இளவல் கோமகன் தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு 95 குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை; பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல் அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்; படுத்தே னாயின் பாழுயிர்ச் சுமையை விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்’றெனத் 100 —————————————————————…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா?
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை-தாெடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை பருவம் பாழ்படுவதா? சிறியவள் இல்லறச் செந்நெறிப் படாஅது பருவமும் உருவமும் பாழ்படப் புறநெறி 55 கருதின ளாகிக் கழிவது முறையோ? தேடருங் குறிஞ்சித் தேனினைப் பாழ்செயும் மூடரும் உளரோ? முக்கனி யாகிய தேமாங் கனியும், தீஞ்சுவைப் பலவும், கொழுங்குலை வாழைச் செழுங்கனி யதுவும் 60 அழுங்கல் எய்திட விழுந்து புழுதியில் நைந்து சிதைவதில்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு-தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை வஞ்சியின் ஏக்கம் பூங்கொடி அளவிலாப் புகழ்நிலை யுறினும் தேங்கெழில் சிதைவுறத் திருமணம் இன்றிக் கொஞ்சும் இளமை கொன்னே கழிய அஞ்சுபொறி அடக்கிய அறவோர் போல நெஞ்செழுங் காதலை நெருப்பினில் பொசுக்கிப் 5 பிஞ்சிற் பழுத்த பேதை ஆயினள்; எவ்வணம் இயம்பினும் எத்துணை மொழியினும் செவ்விய அவள்நிலை சிறிதும் பிறழ்ந்திலள் என்னே இவள்மனம் இருந்த வாறே! பின்னே வாழ்விற் பேதுறு வாளே 10…