மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – -தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில்  பெண்களின் முதன்மைப் பங்கு இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பற்பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றமை போல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தப் போராட்டத்திலும் பெண்கள் ஈடுபாடு இருந்ததில்லை. பெரியார் ஈ. வெ. இராமசாமியும்  எதிர்க்கட்சியான நீதிக்கட்சியும் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய,…

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-8 : தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 9. பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் பிராமணர்களும் ஆதரவு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். “போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, இலக்குவனார்,  முடியரசன் போன்றோர் ஆதரவளித்தனர்.” (விக்கிபீடியா) . போராட்டக்காரர்களிடம்  பிராமணர் எதிர்ப்பு உணர்வு ஆழமாக ஊன்றி இருந்தது. 100க்கு 3 பேராக உள்ள பிராமணர்களுக்காக 100க்கு 97…

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-7 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 7 கட்சிக் கண்ணோட்டமின்றித் தமிழர் அனைவரும் பங்கேற்கும் வகையில் 1938 மொழிப் போரை நடத்த பெரியார் திட்டமிட்டார். அதனால் அரசியல் முகமாகப் பெரியாரும் பண்பாட்டு முகமாக மறைமலையடிகளாரும் நாவலரும் ச.சோமசுந்தர பாரதியாரும் மொழிப்போரில் முன் நிறுத்தப்பட்டனர்.  முதல் மொழிப்போர் வெடிக்கக் கருத்துநிலைத் தூண்டுதலாய் இருந்தோர் மூவர் ஈழத்து சிவானந்த அடிகள், புலவர் அருணகிரிநாதர், அறிஞர் அண்ணா. சென்னையில் இதற்கான பணிகளைத் திட்டமிட்டுக் களம் அமைத்த மூவர் செ.தெ.நாயகம், காஞ்சி மணிமொழியார், சண்முகாநந்த…