சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! –தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 12 அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!  “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”                     – புறநானூறு  55, 10. திணை :  பாடாண்திணை துறை : செவியறிவுறூஉ பாடியோர் : மதுரை மருதன் இளநாகனார் பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்  (இம்மன்னன் குறித்துச் சங்கப்புலவர்கள் பொன்னுரை – 2 இல் குறித்துள்ளோம்.) கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள். அரசியலாட்சி என்றும் பொருள். ஆனால் அரசின் கொற்றம் என வருவதால் இங்கே அது…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! – இலக்குவனார்திருவள்ளுவன்

(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11  யார் யாரையோ இணைப்பது அன்புதான்!  “யாயும் ஞாயும் யார் ஆகியரோ?எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”               – செம்புலப் பெயனீரார்               – குறுந்தொகை : பாடல் 40 பொருள்: யாய்=என் தாய்;…

சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9-தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 10 பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!  “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக”                   ஐங்குறுநூறு 5. 2 பதவுரை : பிணி – நோய்; சேண் நீங்குக – தொலைவிற்குச் செல்லுக; அஃதாவது இல்லாமல் போகுக. ஐங்குறுநூற்றுப் பாடலில் புலவர் ஓரம்போகியார் “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக” என வாழ்த்துகிறார். பசி இல்லாமல் ஆவதும் நோய் தொலைவில் நீங்குவதும் இயல்பாக நடைபெறுமா?…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 : பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான “  (தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், நூற்பா 15) “செறிவு என்பது அடக்கம்; நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் துணிதல்; அருமை என்பது உள்ளக் கருத்து அறிதலருமை” என்று இளம்பூரணர் உரை வகுத்துள்ளார். செப்பும் என்பதற்குக் கூறத் தகுவன கூறலும் என்கிறார் பேரா.முனைவர்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 : பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை 7 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்!  “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே”          – மிளைகிழான் நல்வேட்டனார்                             (நற்றிணை 210: 5-6) அரசின் பாராட்டுரையும் ஆடம்பரப் போக்குவரத்து வசதிகளும் செல்வமன்று. இவை நம் செயல்களால் கிடைப்பவை! நெடிய மொழிதல்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 : உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்!  “ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்”                       கலித்தொகை 149 : 6 – 7  கலித்தொகை – நெய்தற் கலி பாடியவர் – நல்லந்துவனார் திணை – மருதம் கி.மு. காலத்துப் பாடல் ஒற்கம் என்றால் வறுமை. தான் வறுமையுற்றபோது அத்துன்பம் நீக்க உதவியவருக்கு அவருக்குத் துன்பம்…

பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்! : சங்கப்புலவர்கள் பொன்னுரை– 6  : இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 : பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!- கலித்தொகை  “என்றும்பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்சான்றவர்க்கு எல்லாம் கடன்”                நல்லந்துவனார், கலித்தொகை 139, 1-3 நோ என்றால் துன்பம் எனப் பொருள். நோ என்பதிலிருந்து பிறந்ததே நோய். பிணியாளர்களுக்குத் துன்பம் தருவதால் பிணியும் நோய் எனப்படுகிறது. இங்கே நோய் என்பது துன்பத்தையே குறிக்கிறது….

முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்!-இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 1, தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 2 முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்! ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவதுஇல் என மறுத்தலும், இரண்டும், வல்லேஇரப்போர் வாட்டல் – புறநானூறு 196– திணை : பாடாண் திணை– துறை: பரிசில் கடா நிலை– ஆவூர் மூலங்கிழார் பொருள்:  பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பரிசில் தராமல் காலந் தாழ்த்திய பொழுது ஆவூர் மூலங்கிழார்…

வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நல்லோர் சொல்!-இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 1 ****** பல் சான்றீரே! பல் சான்றீரே!கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்,பயன் இல் மூப்பின், பல் சான்றீரே!கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; 5நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்எல்லாரும் உவப்பது; அன்றியும்,நல் ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே! – புறநானூறு 195– திணை : பொதுவியல்;– துறை: பொருண் மொழிக் காஞ்சி.– நரிவெரூஉத்தலையார் பொருள்: பல்வைக் குணங்களை உடையோரே! பல்வைக் குணங்களை உடையோரே! எனப் புலவர்…