சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 1011. Automated teller machine தானியங்கிப் பணப் பொறி teller – கூறுபவர் என்னும் பொருளில் குறி சொல்பவர், வருவதுரைப்போர், கதை சொல்பவர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை கூறுவோர்,, கதை எழுத்தாளர், கதையளப்பவர் எனப் பல பொருள்கள் உள்ளன. குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பொருள்கள் உள்ளன. விரைவு காசாளர்(teller) என்பவர் பணப்பரிமாற்றங்களைக் கையாளும் வங்கி ஊழியர். காசாளர்(cashier) என்பவர் கடைகள், உணவகங்கள் போன்ற வணிக…
சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 1006. Authorities அதிகார அமைப்புகள் ஒரு பொருண்மை தொடர்பில் செயற்பட, முடிவுகளை எடுக்க, உத்தரவுகளைப் பிறப்பிக்க, இசைவுகளை வழங்க, முறையான சட்ட பூர்வ அதிகாரம் கொண்ட அமைப்புகள் 1007. Authority inferior கீழ்நிலை அதிகாரி எந்தப் பதவியாக இருந்தாலும் அந்தப் பதவிக்குச் சார்நிலையிலுள்ள அதிகாரி 1008. Authority, power and அதிகாரமும் அதிகார உரிமையும் Authority என்றால் சான்று வலிமை, இசைவு, அதிகாரமுடையவர், அதிகாரக்குழு,…
சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 1001. Authorised officer / Authorized officer அதிகாரம் பெற்ற அலுவலர் அதிகாரம் பெற்ற அலுவலர் என்பவர் தனியொருவர், ஓர் அமைப்பு அல்லது அரசு நிறுவனத்தின் சார்பாகச் செயற்பட, குறிப்பிட்ட கடமைகளைச் செய்ய, ஆவணங்களைச் செயற்படுத்த அல்லது சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்க அதிகாரம் அல்லது அதிகாரப்பூர்வமாக அதிகாரம் வழங்கப்பட்டவர். இந்த ஏற்பு/ அங்கீகாரம் இயக்குநர்கள் குழு அல்லது அரசுத் துறை அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் மூலம்…
சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 996. Authorise அதிகாரமளி / அதிகாரம் அளி உரிமையளி, இசைவளி, ஏற்பளி செயலைச் செய்வதற்கான அதிகாரத்தை ஒருவருக்கோ நிறுவனத்திற்கோ சட்ட முறைப்படி அளித்தல். காண்க: Authorisation / Authorization 997. Authorised absence / Authorized absence இசைவுடன் வராமை ஏற்புடை வராமை இசைவு பெற்று வராமை ஓப்பளிப்புப்பெற்ற வாராமை என அகராதிகளில் குறிக்கப் பெற்றுள்ளன. பொருள் சரிதான். விடுப்பு ஒப்பளிப்பு என்பதுபோல்தான் இதுவும். என்றாலும் ஒப்பளிப்பு என்பது பொதுவாக நிதி…
சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 991. Authenticate உறுதி யளி மெய்யெனக் காட்டு போலியல்ல என ஆதாரம் காட்டு அதிகார அளிப்பு உறுதியொப்பமிடு; உறுதி யொப்பமிடுதல் சட்டச் சூழலில், உறுதி அளிப்பு என்பது நீதிமன்றத்தில் அதன் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை நிறுவ, ஒரு செய்தியின், குறிப்பாக ஆதாரத்தின் உண்மையான தன்மையை மெய்ப்பிப்பதை அல்லது சரிபார்ப்பதைக் குறிக்கிறது. இச் செயல்முறை, வழங்கப்பட்ட சான்றுகள் போலியானவை அல்லது புனையப்பட்டவை அல்ல, மாறாக அவை கூறப்பட்டவை என்பதை…
சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 986. Audit notes தணிக்கைக் குறிப்புகள் தணிக்கை அல்லது கணக்கு அலுவலகத்தில் கிடைக்கும் தரவு, தகவல் அல்லது ஆவணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கை முடிவுகளைக் கொண்ட, தணிக்கை அலுவலகத்தால் வெளியிடப்படும் குறிப்பே தணிக்கைக் குறிப்பாகும். 987. Audit of accounts கணக்குகளின் தணிக்கை கணக்கியல் உலகின் ஒரு பகுதியாகத் தணிக்கை உள்ளது. கணக்கியல், நிதிப் பதிவுகளை எச்சார்புமினறித் தற்போக்கில் மேற்கொள்ளும் ஆய்வு ஆகும். நிறுவனம் அல்லது…
சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 981. Audience அவையோர்; கேட்பவர் (சட்டத்) தகவல் பெறுநர் audientia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கேட்டல். பொது நிகழ்ச்சியைக் குழுவாகப் பார்ப்பவர்களும் கேட்பவர்களும் Audience எனப்படுகின்றனர். தமிழில் பார்வையாளர், அவையோர், கேட்பவர், கேட்போர், அவையினர் என்கிறோம். சட்டச் சூழலில் கேட்குநர் அல்லது கேட்புஅவை என்பது சட்டத்தகவல் தொடர்பான விவரங்களைப் பெறுபவர்களைக் குறிக்கிறது. இதில் பல்வேறு அளவிலான சட்ட அறிவு, குறிப்பிட்ட தேவைகளைக் கொண்ட பல்வேறு தனியாட்கள், குழுக்கள்…
சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 971-975 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 976. Attributable பண்புக்கூறு கற்பித்துக் கூறு உடைமையாக்கத் தக்க கற்பித்துக் கூறத்தக்க காரணம் கற்பித்தல் சாட்டத்தக்கது. சட்டத்தில், “பண்புக்கூறு” என்பது குறிப்பிட்ட ஒருவர், நிகழ்வு அல்லது செயலால் ஏற்பட்டதாகவோ, விளைந்ததாகவோ ஒதுக்கப்பட்டதாகவோ கருதப்படுவதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் ஒரு காரணத் தொடர்பு அல்லது பொறுப்பைக் குறிக்கிறது. கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்புச்) சட்டம், 1976(Bonded Labour System (Abolition) Act, 1976) பிரிவு (2):…
சட்டச் சொற்கள் விளக்கம் 971-975 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 971-975 971. Attestation சான்றொப்பம் சான்றுக் கையொப்பம் நிறைவேற்றுநர் ஒப்பாவணத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டுச் சான்றாளர் தமது பெயரைக் கையொப்பமாக இடுவது (பி 69, இ.சா.ச.). இ.சா.ச. பிரிவு 69 என்பது இந்தியச் சான்றுரைச் சட்டத்தின் (Indian Evidence Act) 69 ஆவது பிரிவைக் குறிக்கிறது. இது சான்றுரையின் சான்றளிப்பு (attestation) பற்றி விவரிக்கிறது. இறுதி முறியின் சான்றளிப்பு, சான்றுரைஞர் கையெழுத்திடுவதைப்…
சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 966. Attendance (S. 7(9) ROBDA, 1969) வருகை முன்னிலையாதல் கல்வியகம், பணியகம், தொழிலகம் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் பயிலுவோர் அல்லது பணியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் வருவதைக் குறிப்பது. முறை மன்றம் போன்ற இடங்களில் அதன் தலைவர் முன்னர் நேர் நிற்பதை அல்லது முன்னிலையாதலைக் குறிப்பது. தொல்பொருள், கருவூலப் பொருள்கள் சட்டம் 1972(Antiquities and Art Treasures Act), இருப்பூர்தித் துறை(சட்ட…
சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 961. At sight கண்டவுடன் கண்ட நிலை காட்டியவுடன் பார்த்த உடன் “At sight” என்பது சட்டப் பிரிவிலும் நிதித் துறையிலும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டுள்ளது. சட்டப் பிரிவில், “at sight” என்பது ஒரு கடமை அல்லது பணம் செலுத்த வேண்டிய தேவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் குறிக்கும். பணப் பரிமாற்றங்கள், ஒப்பந்தங்களில்,…
சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 951-955 : இலக்குவனார் திருவள்ளுவன்) சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 956. At large கட்டுப்பாடின்றி கட்டுப்பாடற்று பொதுவாக பேரளவில் பொதுவாக நாம் large என்றால் பேரளவு அல்லது பெரிதான என்னும் பொருள்களில்தான் எண்ணுகிறோம். தடையற்ற நிலை, தற்சார்பு(சுதந்திர) நிலை, அகல்விரிவு, அகல்விரிவான, முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு, பரவல் நிலை, தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை, குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை, முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம், பரந்தகன்ற, ஏராளமான, வளமான, பலவற்றை, உள்கொள்ளவல்ல, எல்லாம்…